130802

எந்த போட்டியானாலும் சரி, எப்படிப்பட்ட வலிமை வாய்ந்த அணியாக இருந்தாலும் சரி, இத்தனை கூட்டமோ, போட்டி அழுத்தமோ, உற்சாகமோ, ஏன் கோபமோ கூட ஏற்படாது. ஆனால் பாகிஸ்தான் இந்தியா போட்டியில் இவை ஒருசேரக் காணப்படுவது எழுதப்படாத விதியாக இருக்கிறது. நேற்றிரவு கோடைமாத தீபாவளி போல ஊரெங்கும் வெடிச்சத்தங்கள், கேளிக்கைகள், கூச்சல்கள்…. நாடு முழுக்க உற்சாக கொண்டாட்டங்கள், இந்தியா மேல் பெட் கட்டியவர்களின் வெறித்தனமான வெற்றிகள் என இந்திய நாட்டின் மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்பட்டுவிட்டது. விளையாட்டு எனும் உணர்வுடன் இன உணர்வையும் பகையுணர்வையும் சேர்த்தே பார்க்கப் பழகிவிட்டிருக்கிறோம். பாகிஸ்தான் எனும் நாட்டு வீரர்கள் நமது சகோதர்கள் எனும் உணர்வு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை… பாகிஸ்தானிலும் இதே நிலைமைதான்.

தோனியின் அதிர்ஷ்டம்தான் வெற்றிக்குக் காரணம் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மை என்ன? தோனியின் மதியூகமும் வீரர்களின் ஒருங்கிணைந்த சிறப்பான ஆட்டமும்தான் காரணம்!

சேவக் எப்பொழுதும்போல அதிரடியான துவக்கம் கொடுத்தார். கடந்த 2003 ல் சச்சினும் சேவாக்கும் மிரட்டிய ஊபர் கட்டுகள் தேஜா வூ போல திரும்ப வந்தன. சேவாக் இருந்தாலே ஸ்கோரிங் ரேட் மளமளவென எப்பொழுதும் ஏறும். அதனால்தான் நட்சத்திர வீரரான டெண்டுல்கரை விடவும் சேவக்கை அவுட் செய்ய எல்லா அணிகளும் துடிக்கின்றன. அதற்குத் தோதாக இவரும் நடையைக் கட்டுவார் என்பது வேறு விஷயம். மூன்றாவது ஓவரில் குல்லின் பாலில் நான்கு பவுண்டரிகள் அடித்த பொழுதே அப்ரிடிக்குத் தெரிந்துவிட்டது சீமிங் ஆகாது என்று. இருப்பினும் வாஹாப் நேற்று அபாரமான பவ்லிங் செய்தார். அவரது ரிவர்ஸ் ஸ்விங்கை யாராலும் தொடமுடியவில்லை என்பதுதான் ஹைலைட். சேவக் எதற்காக UDRS ஐ வீணாக்கினார்? அது ஒரு க்ளீன் அவுட். எதிரே நின்றுகொண்டிருந்த சச்சினிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். 18000 ரன்களைக் குவித்த சச்சினே ஒரு ஆட்டத்தில் கோலியிடம் கேட்டுச் செல்லும்பொழுது சேவக் கேட்பதில் என்ன தவறு இருக்கப்போகிறது?

சச்சினின் இன்னிங்ஸ் எதிர்பார்த்தது போலில்லை. நேற்று சச்சின் ரன் எடுக்க ரொம்பவும் சிரமப்பட்டார்… இன்னும் சொல்லப் போனால் திணறினார். அப்ரிடி, வஹாப், அஜ்மல், ஹஃபீஸ் என ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி திணறடித்துக் கொண்டிருந்தார்கள்…. நேற்று ஒருவேளை சச்சின் சதமடித்திருந்தாலும் அதை நிச்சயம் நான் பெரியளவில் பாராட்டியிருக்க மாட்டேன். அதேவேளையில் பாகிஸ்தானின் பவுலிங்கைப் பாராட்டியே ஆகவேண்டும். குறிப்பாக வாஹாப்… மிகச்சிறப்பான பவுலிங்.. யுவ்ராஜைத் தூக்கிய யார்க்கர் ஒன்றே போதும்.. ஒரு லீடிங் எட்ஜில் கோலியும் சென்றுவிட தோனியின் திணறல் ஆட்டத்தைக் கண்டாலே எரிச்சலாக வந்தது. ஹெலிகாப்டர் ஷாட்டெல்லாம் அடிக்க வேண்டாம் பாஸ், குறைந்தபட்சம் “எலி”காப்டர் ஷாட்டாவது அடித்து பவுண்டரிக்கு விரட்டலாம்… இந்த லட்சணத்தில் நான் சிறப்பாகத்தான் விளையாடுகிறேன் என்று பெரிமிதம் வேறு. காம்பிர் இறங்கிக் கொண்டேயிருந்தவர் ஒரு கட்டத்தில் இறங்கியதற்கு ஃபீல் பண்ணியிருப்பார்..

நேற்றைய அபார ஆட்டத்தில் ஒருவருடைய பங்கு மிக முக்கியமானது. அது ரெய்னா.. இந்த இளம் வீரர் ஏழாவது இடத்திற்குத் தன்னை எடுத்தது சரிதான் என்று ”அடித்துச்” சொல்லுகிறார்.

பாகிஸ்தான் தரப்பில் வஹாப் தவிர வேறஎவரும் சிறப்பாக பந்து வீசாததும், மிக மோசமான ஃபீல்டிங்கும்தான் அவர்களது தோல்விக்கு மிக முக்கிய காரணம். சிறப்பாக ஃபீல்டிங் செய்திருந்தாலே இந்தியாவை 200 க்குள் சுருட்டியிருக்கலாம். 45 ரன் இருக்கும்பொழுது சச்சின் கொடுத்த சுலபமாக கேட்சை மிஸ் செய்ததால் அவர்களது தோல்விக்கு முதலடி அங்கேயே விழுந்திருக்கிறது. தொடர்ந்து நான்கு முறை பிழைத்துக் கொண்ட சச்சின் ஐந்தாம் முறை அப்ரிடியின் அபார கேட்சில் வெளியேறியபின்னர்தான் பாகிஸ்தான் மூச்சு விட ஆரம்பித்தது. மிக சுலபமாகத் தடுக்கவேண்டிய பந்துகளெல்லாம் பவுண்டரிகளானது. மற்றபடி பவுலிங் மற்றூம் பேட்டிங் இரண்டிலுமே பாகிஸ்தான் சரியாகத்தான் செய்தது.

இந்தியாவின் பந்துவீச்சு குறிப்பிடத்தக்கதொன்று. மொஹாலி பிட்ச், சுழலுக்கு ஆகாது என்பதால் அஸ்வினைத் தூக்கிவிட்டு நெஹ்ராவை உள்ளிழுத்தார். இதுவொரு நல்ல உத்தி. ஆனால் இந்திய பேட்டிங்கின் போதே பிட்ச் நன்கு மாறிவிட்டது. கிட்டத்தட்ட பவுலிங்குக்கு ஏற்றதாக மாறியதால் ரிவர்ஸ் ஸ்விங்குகளையும் லெக்/ஆஃப் கட்டர்களையும் ஸ்பின்னர்களையும் தாக்குபிடிக்க முடியவில்லை. என்னதான் ஜாஹீரின் பந்தை அடித்தாலும் அவர் திறமையாக பந்துவீசியதாகவே நினைக்கிறேன். அதேசமயம் முனாபும் நெஹ்ராவும் ”கட்டர்களை” மிக மிக அருமையாக வீசினார்கள். பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் பந்தைத் தொடக்கூட முடியவில்லை. அவ்வளவு சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஸ்லோ பால்தான் அதிகமாக வீசினார்கள். பேட்ஸ்மென்களுக்கு பாலைக் காட்டி பூச்சாண்டி காண்பித்தார்கள்! தென்னாப்பிரிக்காவுக்கெதிரான பந்துவீச்சில் நெஹ்ராவைப் பழித்த எல்லாருமே இன்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு மோசமான செயல்!!

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன… 100 க்குள் மூன்று விக்கெட்டுகள் விழவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரியாக அதன்படியே சென்றது. பாகிஸ்தானுக்கு அழுத்தம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. கூடவே தேவையான ரன்ரேட்டும்…. முனாப், நெஹ்ரா பந்துகளை வேறு தொட முடியவில்லை. ரிவர்ஸ் ஸ்விங்கில் எல்லாருமாக கலக்குகிறார்கள்…. அதைவிட ஃபீல்டிங்கும் படுபிரமாதம். ஆஸ்திரேலியாவுக்கெதிராக செய்த அபாரமான ஃபீல்டிங் இங்கேயும் தொடர்ந்தது. பவுலர்கள் 36 ஓவர் வரையிலும் உதிரிகளே கொடுக்காமலிருந்தது சிறப்பான ஆச்சரியம். உதிரிகள் கொஞ்சம் அதிகம் போயிருந்தாலும் நமக்கு சங்குதான்.

முன்பே சொன்னது போல பாகீஸ்தான் பவுலிங்கில்தான் திறமையானவர்களே தவிர, பேட்டிங்கில் அல்ல. Mediocre பேட்ஸ்மென்களாக இருந்ததாலேயே தோல்வியைத் தழுவினார்கள். அதேசமயம் மிக மட்டமான, மோசமான ஃபீல்டிங்கினால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொண்டனர். தவிர, அப்ரிடி இறங்கிய போதே பேட்டிங் பவர்பிளே எடுத்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் ப்ரஷர் கொடுத்திருக்க முடியும். எப்பொழுதும் இந்தியா பாகிஸ்தான் போட்டி கடைசி நுனி வரை இழுக்கும்… இப்போட்டி அப்படியல்ல. 

தோனி இத் தொடர்முழுக்க ஆடவேயில்லை. எனினும் எப்படி கொண்டாடப்படுகிறார்?? அவரது யூகம், கேப்டன்ஸி, அரவணைப்பு… தேவையான இடத்தில் பவுலிங்கை மாற்றியது, அதற்குபகாரமாக விக்கெட் விழுந்தது. எல்லாமே தோனியின் ஆட்டவியூகம்தான்!! அதனால் தப்பிக்கிறார்!! ஒருவேளை தோற்றிருந்தால் நேற்று கேப்டன் பதவியிலிருந்தே அவரைத் தூக்கவேண்டியிருக்கும்!!

மேன் ஆஃப் த மேட்ச் வஹாபுக்குக் கொடுத்திருக்கலாம்… டீம் தோற்றுவிட்டதால் சம்பிரதாயப்படி ஜெயித்த டீமுக்கு கொடுக்கவேண்டியதாகிவிட்டது. இதற்கு முந்திய ஆட்டங்களில் சச்சின் சிறப்பாக ஆடியதற்குத் தரப்படவில்லை. இப்பொழுது தரவேண்டியதாகிவிட்டது!!!

வெல்டன் ப்ரதர்ஸ்… இன்னும் ஒரேயொரு போட்டி…. பாகிஸ்தானைக் காட்டிலும் இலங்கையிடம் இன்னும் நன்கு உழைக்கவேண்டும்!!!

நாளை மீண்டும் இன்னொரு வியூகத்தில் சந்திப்போம்!!

130591

சனிக்கிழமை இலங்கை ஆடிய ருத்ரதாண்டவம், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு மிகப்பெரிய சவாலை எடுத்துரைப்பதாக இருந்தது. தொடரின் ஆரம்பம் முதலே ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டரில் இலங்கை நல்ல வலுவான நிலையில் இருந்துவருகிறது. அதிலும் இங்கிலாந்துடனான காலிறுதியில் ஒரு விக்கெட் கூட போகாத நிலையைப் பார்க்கும் பொழுது, முன்பு ஒருமுறை நமது அணி நானூறைக் கடந்தும் சேஸிங்கில் இலங்கையும் நானூறைக் கடந்ததே, அதுதான் ஞாபகத்திற்கு வந்தது. தனது நிலையை இலங்கை மிக வலுவாகக் காட்டியிருக்கிறது. ஒருவகையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தவும் இருக்கலாம்!!

இங்கிலாந்தின் பலவீனம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்புவதும், வேகப்பந்து எடுபடாததும்தான். இருப்பினும் ட்ராட்டும் மோர்கனும் மிடில் ஆர்டரை நன்கு பார்த்துக் கொண்டனர். பந்துவீச்சுதான் படுமோசமாகிவிட்டது. ஒருவேளை கொலிங்வுட்டும் ஓய்வுபெற்ற ஃபிளிண்டாப்பும் இருந்திருந்தால் அட்லீஸ்ட் விக்கெட்டையாவது தூக்கியிருக்கலாம்…

இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுக்கும் கேப்டனும் ஒரு தேவையில்லாத ஷாட்டில்  பெல்லும் சீக்கிரமே நடையைக் கட்டிவிட பொறுப்பு, ட்ராட்டுக்கும் பொபாராவுக்கும் இருந்தது. ட்ராட்டும் பொபாராவும் விட்டால் ஆளில்லை. அதனால் கொஞ்சம் ஸ்டாண்ட் செய்ய அடித்து ஆடாமல் விக்கெட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஆடினர். இருப்பினும் இலங்கையின் சுழற்பந்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. சீக்கிரமே பொபாரா கழண்டுவிட மோர்கன் நல்ல பொறுப்பான ஆட்டத்தைக் கொடுத்தார். ட்ராட்டின் பேட்டிங்கை கவனித்து வருகிறேன்... வெகு சீக்கிரமாக்வே ஆயிரத்தைநூறு ரன்கள் எடுத்த சாதனையை ஆம்லாவோடு பகிர்ந்து கொண்டுள்ளவர்.... இந்த உலகக் கோப்பையின் 6  அரைசதங்கள் (ஒரு போட்டியில் 47!!) உட்பட அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். மொத்தம் ஆடிய 7 இன்னிங்க்ஸில் 422 ரன்கள்!! மிகச்சிறப்பான ஃபார்ம்!!  நான் முன்பே சொன்னது போல, இங்கிலாந்தின் மிகப்பெரும் விக்கெட் ட்ராட். ஐரிஷ் காரரான மோர்கனும் தென்னாப்பிரிக்ககாரரான ட்ராட்டும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்ததால் இங்கிலாந்து ஓரளவு ரன்களைச் சேர்க்க முடிந்தது. 96 பாலுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து இங்கிலாந்தை வலுவாக்கியது

மோர்கனுக்குப் பிறகு ப்ரயர் வருவார் என எதிர்பாக்கையில் வந்தது ஸ்வான்!! வந்தவுடனே ரிவர்ஸ் ஸ்வீப்பில் எல்.பி!! இவ்விடத்தில் எனக்கொரு சந்தேகம்  இங்கிலாந்து ஏன் ஸ்வானை இறக்கிவிட்டது?? மெண்டிஸின் கேரம்பாலால் ப்ரயார் போய்ச்சேராமல் இருக்கவா?? முக்கி முக்கி 229 ரன்களை மட்டுமே ஆங்கிலேயர்களால் எடுக்க முடிந்தது. ஏனெனி;ல் அவ்வளவு வலுவான நெருக்கமான பந்துவீச்சு இலங்கையிடம் இருந்தது.

இந்த ஸ்கோர் இலங்கைக்கு சவாலானதல்ல. ஓபனர் டில்ஷானும், சங்ககராவும் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் எளிதில் இந்த ஸ்கோரை அடித்து விடமுடியும் என்றாலும் இலங்கை மைதானங்களில் இரவு ஒளிவெள்ளத்தில் சற்றே கடினமான சேஸிங் என்று சொல்லலாம். ஆனால் நடந்ததோ வேறு.. சங்ககராவை மைதானத்துள்ளே வரவிடவில்லை டில்ஷானும் தரங்க வும்.. இருவரும் மாறி மாறி அடிக்க, இலங்கையின் அடித்தளம் நல்ல வலுவாகச் சென்றுகொண்டிருந்தது. அதேசமயம் இங்கிலாந்தின் பந்துவீச்சு மட்டமாக இருந்தது.. அவுட் சைட் ஆஃப் ஸ்டம்புக்குத்தான் குறிவைத்தார்கள். எல்லாமே பவுண்டரிகளைக் கடந்து ரன்விகிதம் சீராக உயர்ந்து கொண்டிருந்தது.

இங்கிலாந்துக்கு டில்ஷானும் தரங்காவும் டபுள் ஸ்ட்ரைக்கில் சென்றிருந்தாலொழிய இங்கிலாந்தைக் காப்பாற்றவியலாது! அரையிறுதியின் மற்ற ஆசிய அணிகளுக்கு “கிலி” ஏற்படுத்தும் துவக்கம் இது!! இங்கிலாந்தின் வழக்கம், அடிவாங்கி பிறகு அடிப்பது... ஆனால் இலங்கையிடம் அடி மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தது சேஸிங்கிலேயே சிறப்பான துவக்கம் எனில் இலங்கையின் பந்துவீச்சு கட்டுப்பாடு பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது!!! இந்தியா, பாகீஸ்தான், இலங்கை அணிகளிடையே பயங்கர போராட்டமிருக்கும்!! இருவரும் இன்னும் இரண்டு போட்டிகளில் இப்படியொரு துவக்கத்தைத் தந்தால் மற்ற அணிகள் வெறூம் கனவு மட்டும் கண்டுகொண்டிருக்கலாம்!!!

ஸ்ட்ராஸைப் பார்க்கும் பொழுதெல்லாம் ரொம்ப பாவமாக இருந்தது, பயபுள்ளைக்கு ஒரு விக்கெட்டாவது கிடைத்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். 230 ரன்னையும் முதலிரண்டு விக்கெட்டுகளே எடுத்தது மிகப்பெரிய வேதனை!!

நியூஸிலாந்தாவது சமாளிக்குமா அல்லது ஒரு பெரிய அப்செட் கொடுக்க காத்திருக்குமா???

தெரியவில்லை. பார்ப்போம்!!

படங்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் உதவி : http://www.espncricinfo.com

130531

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக மிக வலிமையான அணி என்று கேட்டால் நிச்சயம் கைகாண்பிப்பது தென்னாப்பிரிக்காவைத்தான். ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் Win/Loss Ratio அதிகமுள்ள அணி தென்னாப்பிரிக்காதான். அந்த ஆஸ்திரேலியாவே போனபிறகு இவர்களுக்கு மட்டும் என்ன வேலை? ஆனால் நான் பெரிதும் எதிர்பார்த்த இரண்டு போட்டிகள் நடக்காமல் போயின. அது இலங்கை – ஆஸ்திரேலியா போட்டியும், தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா போட்டியும்..

உலகக் கோப்பை போட்டி துவங்கும் முன்னர் நியூஸிலாந்து ஒரு சப்ப டீம். பங்களாதேஷிடமும் இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் மாறி மாறி அடிவாங்கி வெற்றி என்றால் வீசை என்ன விலை என்று கேட்குமளவுக்கு இருந்த அணி அது. ஆனால் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தானை ஜெயித்தாலும் தடுமாறித்தான் காலிறுதிக்கு வந்தது. புக்கிகள் எல்லாரும் தென்னாப்பிரிக்காவே ஜெயிக்கும் என்று பணத்தைக் கட்டி தோற்றுப் போயிருப்பார்கள். ஏனெனில் லீக் சுற்றுகளின் முடிவில் பலம்வாய்ந்த அணியாக தென்னாப்பிரிக்கா வலம் வந்தது!!

நியூஸிலாந்தின் திடீர் எழுச்சி இப்போட்டிகளின் இறுதிகட்டத்தில் பெருத்த சுவாரசியத்தைக் கொண்டுவந்துவிட்டது. ஆனால் இவர்களின் ஆட்டம் கடுமையான போராட்டத்தினிடையேதான் இருந்தது. குப்டிலும் மெகல்லமும் சீக்கிரமே சென்றாலும் ரைடர், டெய்லர் ஆட்டம் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக இருந்தது. ரோஸ் டெய்லரின் ஆக்ரோஷம் இல்லாமல் பொறுமையும் பொறுப்பும் இருந்தது. இந்த ஜோடிதான் வெற்றிக்கான முதற்படியை எடுத்து வைத்தது. இருந்தாலும் நியூஸியின் ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டர்கள் வலுவாகவில்லை. முக்கி முக்கி 221 எடுத்தார்கள். இலக்கு 222!! நெல்சன் எண்!! ஒருவேளை தோற்றுவிடுவார்கள் என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நிஜமாகும் என்று நினைக்கவில்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் மோர்கலும் ஸ்டெயினும் பவுலிங் வீசினார்களேயொழிய மிரட்டவில்லை. மிகவும் எதிர்பார்த்த தாஹீர் மட்டுமே ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தினார். போத்தாவுக்கு விக்கெட்டேயில்லை.

எப்போதும் பொறுப்பாக ஆடும் ஆம்லாவின் விக்கெட்தான் நியூஸிலாந்தின் அடுத்த வெற்றிப்படி! ஏனெனில் ஆம்லா நின்றுவிட்டால் அவ்வளவுதான். தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய பலம் அதன் ஓபனிங்.. ஆம்லாவைத் தூக்கிவிட்டால் பாதிகிணறைத் தாண்டியவாறு… வெகுசீக்கிரமே வெளியேறிவிட்டாலும் ஸ்மித் காலிஸ் கொஞ்ச நேரம் பயம் காட்டினர். பிறகு காலீஸ், ஓரமின் அருமையான கேட்சில் வெளியேற, டிவிலியர்ஸ் காலிஸ் ஜோடி நியூஸியின் வெற்றிக்குத் தடையாக கொஞ்ச நேரம் வந்தனர். அதுவரைக்கும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென ஒரு 10 நிமிடத்திலேயே ஆட்டம் மாறிவிட்டது. அடுத்தடுத்த டபுள் ஸ்ட்ரைக்கால் வில்லியர்ஸ், டுமினி வெளியேறிய பிறகு ஆட்டம் முழுக்க கிவியின் கையில் சிக்கியது!!

தென்னாப்பிரிக்காவில் வலுவான மிடில் ஆர்டர் சாய்ந்தபிறகு லோ எண்ட் ஆர்டர் இல்லாததால் முழுக்க தடுமாறிவிட்டது. முன்பெல்லாம் 9வது வீரர்கள் வரையிலும் ஆடுவார்கள். இப்பொழுது ஏழாவது வீரர் இல்லை என்பதால் பலமாக சறுக்கிவிட்டது.

இதுவரை தென்னாப்பிரிக்கா நாக் அவுட் சுற்றுகளை ஜெயித்ததேயில்லை. போலாக், கிப்ஸ், டொனால்ட், க்ளூஸ்னர் போன்றவர்கள் இருந்தபொழுதே அவர்களால் பைனல்வரை செல்லமுடியவில்லை. மிகமுக்கியமான மேட்சுகளில் சொதப்பலாக ஆடுவதே தென்னாப்ப்ரிக்காவின் வழக்கம்!! இன்று வரையிலும் துரதிர்ஷ்ட அணியாகவே அது கருதப்படுவதற்கு இதுவே காரணம்!!

நியூஸிலாந்தின் ஓரம், கடைசி நேரத்தில் ஆட்டம் காண்பித்த டுப்லெஸிஸை ஒரு ஜம்பிங் கேட்ச் மூலம் வெளியேற்றிய சவுதி, மிகச்சிறப்பான பவுலர் மெக்கல்லம் ஆகியோரால் நியூஸி, அரையிறுதிக்குச் சென்றுவிட்டது!! இது மிகப்பெரிய ஏமாற்றம். அரையிறுதியில் நியூஸிலாந்தை எளிதில் வீழ்த்திவிட எதிரணியினருக்கு வாய்ப்பு அதிகம்!

இன்று நடக்கும் இலங்கை இங்கிலாந்து போட்டியில் இலங்கை ஜெயிக்கவே அதிக வாய்ப்பு இருந்தாலும் இங்கிலாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது!! பார்ப்போம்!!

130487

நேற்றிரவு எங்கள் ஏரியா முழுக்க தீபாவளி போல காட்சியளித்தது. ஒரே வாணவேடிக்கை, பட்டாசு சத்தங்கள், ஜெய் ஹோ என்ற கரகோஷங்கள், தேர்தல் நேரத்திலும் கூட்டம் கூடி மகிழ்ச்சியை பகிர்ந்தளித்தது என எல்லாருடைய முகத்திலும் சந்தோஷக் களை… எல்லாவற்றிற்கும் காரணம்?

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா!!

மஞ்சள் உடைக்காரர்களைப் பார்த்தாலே மஞ்சள்காமாலை போல பதுங்கும் அணிகளுக்கு இப்பொழுது மென் இன் ப்ளூ வைப் பார்த்தால் ஃபுளூ வரும் என நினைக்கிறேன். நேற்றைய ஆட்டம் இந்தியாவின் மிகச்சிறப்பான ஆட்டங்களுல் ஒன்று.

டாஸில் ஆஸி ஜெயித்தபோதும் எனக்கு நம்பிக்கையில்லை. எப்படியும் இந்தியா வெல்லுவதற்கான வாய்ப்பு உண்டு என்றே நம்பினேன். வாட்சன், ஹடினின் சிறப்பான துவக்கம், மிக முக்கிய நேரங்களில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பாண்டிங், சிறப்பான கம்பனி கொடுத்த டேவிட் ஹஸி போன்றவர்களால் ஸ்கோர் 260 ஐத் தொட்டாலும் இந்தியாவின் பவுலிங்கால்தான் அவர்களால் 300 வரை எட்டவியலாமல் போனது. நேற்றைய நம் அணியின் ஃபீல்டிங் மிகச்சிறப்பாக என்று சொல்லமுடியாவிட்டாலும் எந்த தவறும் செய்யாமல் பொறுப்பாக செய்தார்கள். ஹர்பஜன், ரெய்னா, யுவ்ராஜ் போன்றவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டார்கள். இவை ஏன் மற்ற போட்டிகளிலும் காண்பிக்கப்படுவதில்லை?

அஸ்வினின் வாட்சன் விக்கெட்டுதான் பெரியதிருப்பம் என்று சொல்வேன். ஏனெனில் வாட்சனும் ஹடினும் இணைந்து இன்னுமொரு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தால் நிச்சயம் முன்னூறெல்லாம் தாண்டியிருக்கும்!! இந்த டோர்ன்மெண்டிலேயே மிகச்சிறப்பான ஆல்ரவுண்டராக வலம் வருகிறார் யுவ்ராஜ்.. முக்கிய விக்கெட்டுகளை எடுப்பதோடு ஒவ்வொரு ஆட்டத்திற்கும் குறைந்தது 50 ரன்கள் எடுத்துவிடுகிறார்…. மேன் ஆஃப் த சீரியஸ் மிக அருகில் யுவ்ராஜ்!!! இந்த உலகக் கோப்பையில் 6 இன்னிங்க்ஸ் ஆடியுள்ள யுவராஜ் 1 சதம் நான்கு அரைசதங்கள் அடித்து 341 ரன்களைக் குவித்திருக்கிறார்.. பவுலிங்கிலும் 24 ஆவ்ரேஜுடன் 11 விக்கெட்டுகள்!!

வழக்கம்போல ஜாஹீரின் பவுலிங் மிகப்பிரமாதம்.. ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளராக ஸ்ரீநாத்துக்குப் பிறகு அடையாளம் காணப்பட்டிருக்கிறார்… நேற்று சச்சின் பவுலிங் போட்டதுதான் விஷேசமே… அவர் பவுலிங் செய்த ஓவர்களுக்குப் பிறகு ஒரு விக்கெட் விழுந்தது. மொத்தம் இரண்டே ஓவர், இரண்டே விக்கெட்…. சச்சினின் பவுலிங் ராசி என்பது இதுதானோ?

இந்தியாவின் துவக்கம் ஓரளவு பரவாயில்லை… ஆனால் எப்பவும் போல ஒரு மோசமான ஷார்ட் பாலுக்கு அவுட் ஆகித் தொலைந்தார் ஷேவாக். அது தேவையில்லாத ஷாட். சச்சினும் ஷேவாக்கும் நிதானமாக ஆடியது நிம்மதியை அளித்தது என்றாலும் ஷேவாக் இன்னும் நின்றிருக்கலாம். இது மிக முக்கிய மேட்ச் என்பதை ஷேவாக் நினைவில் வைத்திருக்கவில்லை…

சச்சின்!!! என்ன சொல்வது இந்த மனுஷனை?? 18000 ரன்கள் கடந்து சாதனை!!! இன்னும் 14000 ரன்கள் கூட யாரும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…. ஃபார்ம் போகாத ஒரே மனுஷன் இவர்தான். நேற்று 100 வது சதம் எட்டுவார் என்று மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 53 லேயே சென்றது ஏமாற்றம்தான். இருப்பினும் அவரது ஃபேவரைட்களான கவர் ட்ரைவ், மிட் விக்கெட், ஸ்கொயர் லெக் ஷாட்டுகளும் ( ஒரு ஊப்பர் கட்டும் ) தொடர்ந்தன!! பாகிஸ்தான் மேட்சில் அடிங்க சச்சின்!!!

வழக்கம் போல காம்பீரின் ஸ்டைலிஷான ஆட்டம்,கொஞ்ச நேரம் கம்பனி கொடுத்த கோலி, ஃபார்மில்லாத அதிர்ஷ்டகார தோனிக்குப் பிறகு ரெய்னாவும் யுவராஜும் ஆட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டனர். யுவ்ராஜ் இப்பொழுது சச்சினுக்கு அடுத்த மிகப்பெரும் நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறார்.  பதானுக்கு மாற்றாக வந்த ரெய்னாவின் ஆட்டம் குறிப்பிடத்தக்கது. பவர்ப்லே முதல் பாலில் சிக்ஸர் அடித்த ரெய்னா இனிவரும் ஆட்டங்களில் முக்கிய இடத்தை வகிப்பார்….

இப்பொழுது இந்திய அணி ஃபீல்டிங், பவுலிங் மற்றூம் மிடில் ஆர்டர்களில் நல்ல முன்னேற்றம் கண்டுவிட்டது. இன்னும் ஹர்பஜன், முனாப் படேல், தோனி ஆகியோர் முழுத்திறனும் வெளிப்படுத்தினால் இந்தியாவை ஜெயிப்பது மிகவும் கடினம்!! அதிக ரன்குவிப்பில் முதல் நான்கு இடங்களில் மூன்று பேர் இந்தியர்கள்!! (சச்சின் 379, ஷேவாக் 342, யுவ்ராஜ் 341)

130495ஆஸியின் பவுலிங்கைப் பொறுத்தவரை சுரத்தில்லாமல் போனது கவனித்த அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். யுவராஜும் ரெய்னாவுமே அநாயசமாக அடித்தார்கள். அத்லெடிக் ஃபீல்டர்கள் என்றழைக்கப்படும் ஆஸியின் ஃபீல்டர்கள் நன்கு உழைத்தும் பயனில்லாமல் போனது. யுவ்ராஜின் பந்தில் ப்ரெட்லியின் கண்ணினோரம் அடிபட்டு இரத்தம் ஒழுகிய நிலையிலும் பாண்டேஜ் ஒட்டி ஆடிய அவர்களின் உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!! வெல்டன் ப்ரட் லீ!!!

பாண்டிங்கின் இறுதி உலகக் கோப்பைப் போட்டியில் அவர் மறக்கவியலாத ஆட்டம் ஆடினார்… அது ஒன்றுதான் ஆஸிக்கு ஆறுதல்!!!

பாகிஸ்தானோடு பார்ப்போம் நண்பர்களே!!

படங்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் உதவி : http://www.espncricinfo.com

130423

மொத்தமிருந்த நான்கு போர்களில் முதலாவது போர் நேற்று முடிவுக்கு வந்துவிட்டது.

முதலாவது சரக்கு முடிவு (குவாட்டர் பைனல்!! Open-mouthed smile)

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான்

இந்தியாவுடனான போட்டியில் விளையாடாமலிருந்த கெய்லும் கேமர் ரோச்சும் இம்முறை பங்கேற்றனர். பழைய ரெக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்ததில் ஏதோ தப்பித்தவறிதான் பாகிஸ்தான் ஜெயித்திருக்கிறது என்றாலும் குரூப் ஏ பொறுத்தவரையில் இரண்டு பெரிய அணிகளைத் தோற்கடித்த பாகிஸ்தானுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஒரு சுண்டைக்கா டீம்.

ஆரம்பம் முதலேயே பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் போல இருந்தது.. அதற்கேற்றவாறு மிக முக்கிய வீரர்களான கெயில், ஸ்மித், ப்ராவோ ஆகிய மூன்று பேரும் சீக்கிரமாகவே நடையைக் கட்டினார்கள்!!! கெயிலாவது பரவாயில்லை இரண்டு ஃபோர் அடித்தார்... பிராவோ அதைவிட.... வந்த மூணாவது பாலில் டக்கு!! பத்து ஓவருக்கு 18 ரன்கள் 3 விக்கெட்..... குவார்டர் பைனல் என்பதை தவறாகப் புரிந்து கொண்டு “குவாட்டர்” அடித்து ஆடினார்களா விண்டீஸ்?? பாகிஸ்தானின் பவுலிங் பிரமாதம்… ஹஃபீஸ் ஓவரில் திணறினார்கள். குறிப்பாக சந்தர்பால்... ஏதோ டெஸ்ட் ஆடுவது போல எல்லா பாலையும் ஸ்ட்ரோக்கிக் கொண்டிருந்தார்... இறங்கிக் கத்தவேண்டும்போலத் தோன்றியது “வெஸ் இண்டியன்ஸ்!!!! இப்ப நீங்க ஆடிட்டி இருக்கிறது வார்ம் அப் மேட்ச் இல்ல.... குவார்டர் பைனல்!!!!”

சந்தர்பால் சர்வான் ஜோடி கொஞ்சநேரம் நிலைத்தாடினாலும் பாகிஸ்தானின் மந்திர சுழலில் காணாமல் போனது இவர்களது பார்ட்னர்ஷிப். வரிசையாக விக்கெட்டுகள் விழுந்து கொண்டேயிருந்தன.  வெஸ்ட் இண்டீஸின் இந்த ஆட்டம் படுமோசமான ஆட்டம். காலிறுதியில் விளையாடுகிறோம் என்ற நினைப்பில் விளையாடியதைப் போலத் தெரியவில்லை. நாலாம் தர அணியைப் போல ஆடியது. எந்தளவுக்கு மெதுவாக விளையாடியதோ அதற்கு நேர்மாறாக சீக்கிரமாகவே விக்கெட்டுகள் விழுந்தன. இதெல்லாவற்றையும் சந்தர்பால் ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்… வேற வழி?

முதல் முப்பந்தைந்து ஓவருக்கு ரசாக் வரவேயில்லை. சயித் அஜ்மலை பாகீஸ்தான் மறைத்து வைத்து வெளிப்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன்.  பாகிஸ்தானின் பவுலிங் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருப்பது போலத் தோணுகிறது.  ஒருவேளை ஆஸியை நாம் வென்றாலும் பாகிஸ்தானை வெல்வதுதான் கடினமாக இருக்குமென்று நினைக்கிறேன்!!!

எப்படியோ விண்டீஸ் 112 க்கு ஆலவுட்!! சந்தர்பால் மட்டும் அவுட் ஆகாமல் நின்றுகொண்டிருந்தார்.. 106 பாலுக்கு வெறும் 46 ரன்களே எடுத்திருந்த அவர் ஸ்லோயஸ்ட் ஃபிஃப்டிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்... வந்தவரெல்லாம் சென்றுவிட்டால் சந்தர்பால் ரன் அடிக்க இடமேது??

அப்ரிடிக்கு 4 விக்கெட்டுகள்!!
மனுஷன் மேன் ஆப் த சீரியஸ் வாங்கிவிடுவார் போலிருக்கே??

பிறகென்ன ஹஃபீஸும் கம்ரான் அக்மலும் சேர்ந்து விக்கெட்டே இல்லாமல் அடித்த ஜெயித்த கதையை நான் எழுதவேண்டுமா என்ன??

இந்த தோல்விக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் பக்கம் பல மாற்றங்கள் வரலாம்... சிலர் அணியிலிருந்து தூக்கப்படலாம். கேப்டன்கள் மாறலாம்....

வெஸ்ட் இண்டீஸின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தால் நிச்சயம் அதன் ஸ்திரமில்லாத பேட்டிங் தான் முன்னுக்கு வருகிறது. ஸ்மித் மட்டுமே உறுப்படியாக ஆடிய மனுஷன். ஆனால் முக்கியமான இந்த மேட்சில் ஆடாமல் விட்டது மிகப்பெரிய ஏமாற்றம்... லீக் முழுக்க ஆடாமல் காலிறுதியில் ஆடிய சந்தர்பால், இந்த தொடர் முழுக்க ஏமாற்றிய கெய்ல், இடியடி அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட பொலார்ட், சர்வான் போன்ற எந்த முண்ணனி வீரர்களும் ஆடவில்லை... பிறகெங்கே காலிறுதியிலிருந்து முன்னேற??

ஆனால் வெஸ்ட் இண்டீஸின் பவுலிங் டிபார்ட்மெண்ட் மிக அருமையாக இருந்தது. இந்தியாவுக்கெதிராக இறக்கப்பட்ட ரவிராம்பால் ரொம்பவும் சவாலாக இருப்பாரென எதிர்பார்த்தேன். “நானும் பதினொண்ணிலொண்ணு” என்று சொல்வதைப் போல சுத்தமாக எடுபடாமல் போனார்.. ரோச் மற்றும் பென் ஆகியோர் லீக் போட்டிகளில் அசத்தினார்கள். கேப்டனும் நன்றாகத்தான் வீசினார். கேப்டனைச் சொல்லி குறையொன்றுமில்லை. பேட்ஸ்மென்கள் ஒழுங்காக ஆடாததற்கு அவர் என்ன செய்வார் பாவம்!!!

பாகிஸ்தான், பேட்டிங்கை விடவும் பவுலிங்கில் நல்ல பலமாக இருக்கிறது. தவிர, அவர்களது ஸ்பின்னிங் டிபார்ட்மெண்ட் ரொம்பவும் வலுவாக இருப்பதால் அரையிறுதியில் இந்தியா (அல்லது ஆஸி) திணறக்கூடும்... ஆஸ்திரேலியாவாக இருந்தால் ஸ்பின்னுக்கு ரொம்பவும் திணறுவார்கள். அப்ரிடியின் பவுலிங் சற்று வித்தியாசமாகத் தெரிகிறது.  ஹஃபீஸ், அஜ்மல் போன்றவர்கள் நன்கு பவுல் செய்கிறார்கள். குறிப்பாக அஜ்மல் தூஸ்ராவில் எதிரணியை திணறவைக்கிறார்.

சோ, அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது பாகிஸ்தான்.. இது கடந்தகால கசப்புகளிலிருந்து மனதளவில் அவர்களை மிகவும் தேற்றியிருக்கும். 12 வருடங்களுக்குப் பிறகு அரையிறுதி செல்வதால் கோப்பை பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருதப்படுகிறது.


130424.2

இந்தியா ஆஸ்திரேலியா இன்று ஒரு மினி பைனலுக்காகக் காத்திருக்கிறது. பழைய ஹிஸ்டரிகளைப் புரட்டிப் பார்த்து நேரத்தை வீணாக்கவேண்டாம். இன்றைய ஃபார்ம் என்ன என்பதுதான் கணக்கு. இரண்டுமே பெரிய மலைகள். இரண்டிலொன்று இன்றிரவு வெளியேறுவது நிச்சயம். ஆக, போட்டி மிகவும் சுவாரசியமானது….

கவனிக்கப்படவேண்டியவர்கள்:

சச்சின் : நூறாவது சதம், சிறப்பான ஃபார்ம்
யுவ்ராஜ் : தொடர் முழுக்க நல்ல ஆல்ரவுண்டராக வருவது
அஸ்வின் : கேரம் பால் உத்தி

பாண்டிங் : முக்கிய மேட்சுகளில் முக்கிமுக்கி அடிப்பது
ஹஸி : மிகச்சிறந்த மேட்ச் வின்னர்
ஜான்ஸன் : மிரட்டும் வேகம். சேவாக் கவனம்!!

இன்றிரவு இந்திய ரசிகர்கள் கண்ணீர் சிந்துவதைப் பார்க்கலாம்...

அது
ஆனந்தக்கண்ணீரா? இல்லை
அழுவாச்சிக் கண்ணீரா???

என்பதுதான் கேள்வி!!!

படங்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் உதவி : http://www.espncricinfo.com

130334

எப்படியும் காலிறுதியில் போய்விடுவோம் என்று தெரியும். ஆனால் அங்கிருந்து அரையிறுதிக்குப் போவோமா என்பதுதான் இப்போது கேள்வியே. ஏனெனில் அடிபட்ட சிங்கம் ஆஸ்திரேலியா கடுமையாகப் போராடும். ஆனால் போராடியே ஜெயிக்கும் நாம் சறுக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தியா ஒருவேளை ஆஸியை ஜெயித்துவிட்டால் பைனல் கன்ஃபர்ம். ஒருவேளை தோற்றுவிட்டால் ஆஸிக்குத்தான் கோப்பை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்!

வெஸ்ட் இண்டீஸ் மேட்சில் சேவக் மற்றும் சச்சினின் ஆட்டமில்லாத இந்தியரின் ஆட்டம் புன்னகைக்க வைத்தது. அவர்களையே இதுவரை நம்பியிருந்த அணி, இப்பொழுது யுவ்ராஜை நம்பியிருக்கப் போகிறது. யுவ்ராஜின் எழுச்சியும், அதிர்ஷ்டமும் அணிக்கு மிக நல்லது. ஆனால் அவர் அதை இன்னும் மூன்று போட்டிகளில் காண்பிக்கவேண்டும். அதேசமயம், மோசமான பேட்டிங் முறையில் விக்கெட்டைப் பறிகொடுக்கும் கேப்டன் தோனியைப் பார்த்தால் எரிச்சலாக வருகிறது. கேப்டன் ஆனாலே பேட்டிங் திறம் பறிபோய்விடுகிறது போல… குறிப்பாக இந்தியர்களுக்கு. தோனி நேற்று வீணாக இறங்கி வந்து அவுட் ஆனார்… எங்கே சார் போச்சு உங்க ஹெலிகாப்டர் ஷாட்? கோல் திரும்பத் திரும்ப பவுல்ட் ஆவது சரியில்லை. இருப்பினும் பரவாயில்லை ரக ஆட்டம். ரெய்னாவை ரொம்பவும் எதிர்பார்த்தது தவறு!!! பதான்???? அடுத்த மேட்சில் இருப்பாரா என்று தெரியவில்லை. பவுலிங்கும் எடுபடவில்லை.

முதல் ஓவரை மட்டுமல்ல, முழுமையாகவும் பவுலிங் செய்தது அஸ்வின் மட்டுமே..  துல்லியமான பவுலிங்கில் ஜாஹீர் அசத்தி வருகிறார்.இருவரும் சிறப்பாக பந்துவீசினார்கள். ஜாஹீர் பவுலிங்கில் இரண்டாமிடத்தில் இருப்பது மனதளவில் மற்றவர்களுக்கு அச்சமேற்பட வாய்ப்பிருக்கிறது. அஸ்வினை ஒரு பிரம்மாஸ்திரம் போல தோனி மறைத்து வைத்திருந்ததற்கு அவரின் கேரம் பால் பந்துவீச்சு முறைதான் காரணம். இலங்கையில் மெண்டிஸ் போல அஸ்வின் கேரம் பால் எனப்படும் முறையில் வீசுகிறார். ரொம்ப தெளிவாகச் சொல்லவேண்டுமெனில் ஆஃப் ஸ்பின் போல லெக் ஸ்பின் போடுவது. பந்துவீச்சுப் பணி முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்றெல்லாம் சமாதானம் சொல்லிவிடமுடியாது. ஏதோ பரவாயில்லை எனலாம்.  150 ரன் வரை மூன்று விக்கெட்தான் போயிருந்தது.  188 க்கு ஆல் அவுட்…. ஆஸ்திரேலியாவாக இருந்தால் இப்படி பொல பொலவென விழாது என்பதை நினைவில் கொள்ளவும். ஆக, ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். பேட்டிங் வரிசையும் பலமானதுதான். ஹர்பஜன் சென்ற போட்டிகளைக் காட்டிலும் ஓரளவு பிரமாதம் எனலாம்… தொடர்ந்து ஆல்ரவுண்டராக வரும் யுவ்ராஜை நிச்சயம் பாராட்டலாம்!!

ஆஸியுடனான டீமில் சேவாக் வந்துவிடுவார் எனில் பதானைத் தூக்க வாய்ப்பிருக்கிறது. முனாப் அல்லது நெஹ்ரா மற்றும் அஸ்வின் தொடர்வார்கள். ரெய்னாவுக்கு வாய்ப்பு தரலாம். பதானுக்குக் கொடுத்தது போதும்.

போனது போகட்டும். இனி என்ன செய்யலாம்.!! ஆஸ்திரேலியா ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டதாலும் நாக் அவுட் போட்டி என்பதாலும் கடுமையாகப் போராடும். அப்படி போராடும் குணம் ஹஸியின் அதிகம் உண்டு. ஹஸியை அவுட் ஆக்கினாலே போதும் ஆஸ்திரேலியாவின் முன்னேற்றம் தடைபடும்!! ஹஸியை அவுட் ஆக்க ஆஸ்திரேலியாவுக்கு மூன்று விக்கெட் போயிருக்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்!! போட்டி இங்கே நடைபெறுவதால் கொஞ்சம் சவுகரியங்கள் ஜாஸ்தி!

ஆஸியின் மிக முக்கிய விட்டெட்டுகள் மைக் ஹஸி, வாட்சன், கிளார்க், ஹடின்… இவர்கள் தவிர, வைட், மற்றும் பாண்டிங்கை எளிதாகத் தூக்கலாம். ஆனால் பாண்டிக்குக்கு இந்தியாவின் பவுலிங் அல்வா சாப்பிடுவது போல, அதனால் கவனம் தேவை. அவர்களது பந்துவீச்சு மிகத்துல்லியமானது என்பதை நம்மாட்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆஸ்திரேலியா என்றால் சச்சினின் பேட்டிங் அருமையாக இருக்கும். லீ, ஜான்ஸன் மற்றும் டைட் ஆகியோர் குறிப்பிடத்தக்க மனுசன்கள். சுழற்பந்து மிக வீக்கமாக இருப்பதால் அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்!!

டேஞ்சர் மென்!!

சச்சின்
சேவக்
யுவ்ராஜ்
அஸ்வின்
ஜாஹீர்

ஹஸி
வாட்சன்
கிளார்க்
ஜான்ஸன்

எப்படியும் இந்தியா ஜெயிக்கும் என்பது என் கணிப்பு… அரையிறுதியில் பாகிஸ்தானுடன் போட்டி இருக்கும்!! பார்ப்போம்!!

லீக் போட்டிகளின் முடிவில்….

புள்ளிப் பட்டியல் :

Group A

Teams    Mat Won Lost    Tied /NR  Pts
Pakistan 6 5 1 0 10
Sri Lanka 6 4 1 1 9
Australia     6 4 1 1 9
New Zealand 6 4 2 0 8
Zimbabwe     6 2 4 0 4
Canada     6 1 5 0 2
Kenya 6 0 6 0 0

Group B

Teams    Mat Won Lost    Tied    Pts
South Africa 6 5 1 0 10
India         6 4 1 1 9
England     6 3 2 1 7
West Indies    6 3 3 0 6
Bangladesh    6 3 3 0 6
Ireland 6 2 4 0 4
Netherlands 6 0 6 0 0

புள்ளிவிபரங்கள் (07-03-11 வரை)

அதிக ரன்கள்

சங்ககரா 363
ட்ராட் 336
ஸ்ட்ராஸ் 329
ஷேவாக் 327
டெண்டுல்கர் 326

அதிக விக்கெட்டுகள்

அப்ரிடி 17
ஜாஹீர்கான் 15
பீட்டர்சன் 14
சவுதீ 14
ரோச் 13

சதம்/அரைசதங்கள்

டீவில்லியர்ஸ் 2 / 1
டென் டஸ்காட் 2 / 1
டெண்டுல்கர் 2 / 0
டெய்லர் 1 / 1
ஜெயவர்தனே 1 / 1

படங்கள் மற்றும் புள்ளிபட்டியல் உதவி : Cricinfo இணையதளம்

காலிறுதி :

C பாகிஸ்தான்

VS

வெஸ்ட் இண்டீஸ்
D ஸ்ரீலங்கா

VS

இங்கிலாந்து
E இந்தியா

VS

ஆஸ்திரேலியா
F நியூஸிலாந்து

VS

தென்னாப்பிரிக்கா

அரையிறுதி (உத்தேசம்)

பாகிஸ்தான் Vs இந்தியா
ஸ்ரீலங்கா Vs தென்னாப்பிரிக்கா

129500

கிட்டத்தட்ட காலிறுதிப் போட்டிகள் நெருங்கிவிட்டன. Group A வைப் பொறுத்தவரையிலும் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால் Group B ல் தான் அதிமுக கூட்டணி போல இழுவை நடந்து கொண்டிருக்கிறது. எந்த அணி வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பது போல காட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன..  எப்படியும் நூலிழையில் இந்தியா அடுத்த கட்டத்திற்குப் போய்விடும் என்பது உறுதி!!

முதலில் இப்போதைய நிலவரப்படி ஒவ்வொரு அணியின் பலம் பலவீனம் குறித்து பார்ப்போம்!!
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஏற்ப வரிசைபடுத்தியிருக்கிறேன்.

Group A

8. வெஸ்ட் இண்டீஸ்

சுமாரான பவுலர்கள், சுமாரான பேட்ஸ்மென்கள் என ஒரளவு சுமாரான பேலன்ஸ்டு டீமாக இருக்கிறது. இன்னும் கெயில் சர்வான் போன்றவர்கள் ஆடவே ஆரம்பிக்கவில்லை. கெயிலின் மரண அடி இங்கிலாந்து போட்டியின்போது தெரிந்தாலும் நீண்டநேரம் நிலைக்க முடியவில்லை. சிலசமயங்களில் கேப்டன் கை கொடுத்தாலும் மொத்தமாக பேட்டிங்கில் ஏதோ குறைவது போலத் தெரிகிறது. பவுலிங்கைப் பொறுத்தவரையில் கேமர் ரோச் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பென்னும் நல்ல பவுலிங்கைத் தருகிறார்.  இதுவரை வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்த மூன்று போட்டிகளுமே பலம் குன்றிய அணிகளோடுதான். இனிமேல்தான் இந்தியாவை எதிர்கொள்ளப் போகிறது. அதில் ஒருவேளை ஜெயிக்கும் பட்சத்தில் தனது நிலையை இன்னும் ஸ்தரப்படுத்திக் கொள்ள இயலும்!

7. இந்தியா

வேலைக்காகத பவுலர்கள், பெரிய அளவில் சொதப்பும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள், ஓடத்தெரியாத ஃபீல்டர்கள், தவறான வியூகம் அமைக்கும் கேப்டன் என இன்றைக்கு அதிகமாக குறையுள்ள ஒரே அணி இந்தியாதான். அதைவிட பேட்டிங் பவர்ப்ளே எடுத்து ரன்னுக்கு பதில் விக்கெட் இழக்கும் ஒரே அணியும் இந்தியாதான்.. இதுவரை ஜாஹீர், சச்சின், சேவக் தவிர வேறு எவரும் ஆடவில்லை என்றே சொல்லலாம். அஸ்வினை ஏதோ பிரம்மாஸ்திரம் போல மறைத்து வைத்திருப்பது இன்னமும் வீண் தான். வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் பதானைத் தூக்கிவிட்டு ரெய்னாவையும், சாவ்லாவைத் தூக்கிவிட்டு அஸ்வினையும் இறக்கலாம்… ஆனால் எல்லாரும் கவனிக்காத ஒரு விஷயம் சாவ்லாவை விடவும் ஹர்பஜனின் பந்துவீச்சு சரியில்லாமல் போனதுதான்… கிட்டத்தட்ட இருவருமே 42 ஆவ்ரேஜ்களுக்குள் வருகின்றனர். ஹர்பஜன் 5 மேட்சுக்கு 5 விக்கெட், சாவ்லாவோ, 3 மேட்சுக்கு 4 விக்கெட்… இருவரில் சாவ்லாவே பெஸ்ட் என்று தோணுகிறது! இதுவரை இந்தியா ஜெயித்த மூன்று போட்டிகளும் பலம் குன்றிய அணிகளோடுதான். தென்னாப்பிரிக்காவுடன் தோற்றுவிட்டது, இங்கிலாந்து 339 ஐ டை செய்ததால் தோற்றதாகவே அர்த்தம்!! சோ, இந்தியா கோப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. பவுலிங் துறை கொஞ்சம் எழுந்தால் மட்டுமே கப்பு கிடைக்கும்! இல்லாட்டி வெங்கலக் கிண்ணம் கூட கிடைக்காது.

6. இலங்கை

இலங்கையின் ஆட்டம் கணிக்கமுடியாததாக இருக்கிறது. ஆஸியிடம் ஓரளவு விளையாடினாலும் மழை வந்ததால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விட்டது. பாகிஸ்தானுடன் போராடி தோற்றதால் இலங்கை இன்னும் பெரிய அணிகளுடன் மோதி வெற்றி பெறவில்லை என்றாலும் அதன் பேட்டிங் மற்றும் பவுலிங் நம்பிக்கை அளிக்கிறது. தரங்கா, சங்ககரா போன்ற ஃபார்ம் பேட்ஸ்மென்களும் மலிங்கா போன்ற ஃபார்ம் பவுலர்களும் இருப்பது இன்னும் பலத்துடன் இருப்பதைக் காண்பிக்கிறது. அதேசமயம் சுழலில் முரளி இன்னும் ஜொலிக்காதது பின்னடைவாகவே இருக்கிறது! இன்றைய போட்டியில் நியூஸிலாந்தை வெற்றி பெறும் பட்சத்தில் கோப்பை வெல்வதற்கான வாய்ப்புள்ள அணிகளில் தனது இடத்தை ஸ்தரப்படுத்திக் கொள்ளும்!

5. நியூஸிலாந்து

ஆஸியிடம் தோற்றாலும் தனக்கு நிகரான பலம் வாய்ந்த பாகிஸ்தானை ஜெயித்தது!! அதனால் தற்சமயம் தற்காலிகமாக இரண்டாமிடத்தில் இருந்தாலும் இலங்கையுடன் இன்று தோற்றுவிடும் என்பதில் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன். சப்பை அணிகளுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அணியில் சுமாரான பேஸ்மென்களே நிறைந்திருக்கிறார்கள். மெக்கலமும் சவுதியும் நல்ல ஃபார்மில் இருந்தாலும் மொத்தமாக அணியில் ஏதோ மிஸ் ஆவது தெரிகிறது.

4. பாகிஸ்தான்

நியூஸிலாந்தைத் தவிர அது தான் ஆடிய மற்ற அனைத்து போட்டிகளும் வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கையுடன் போராடி ஜெயித்ததே அதன் பலத்தை நிரூபித்தது போலாகும். இருப்பினும் பாகிஸ்தானின் பேட்டிங் ரொம்பவும் பலவீனமாக இருப்பதாக உணருகிறேன். மிஸ்பா தவிர வேறெவரும் ஆடியவாறே ஞாபகமில்லை. சிலசமயங்களில் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் கைகொடுக்கிறார். பவுலிங்கில் ஆரம்பத்தில் அப்ரிடி கலக்கினாலும்  பிறகு திறமையைக் காட்டமுடியவில்லை. உமர் குல் பரவாயில்லை… ஆஸ்திரேலியாவுடனான போட்டியின்போது பாகிஸ்தானின் மொத்த பலம், பலவீனம் ஆகிய அனைத்தும் தெரிந்துவிடும்!

3. இங்கிலாந்து

நன்றாக யோசித்துப் பார்த்தால், இங்கிலாந்து Group B யில் மிக நல்ல டீம் தான். பெரிய அணிகளான வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவை ஜெயித்தது. இந்தியாவை 339 க்கும் சேஸிங் செய்து டை செய்தது… அதேசமயம் சின்ன அணிகளான பங்களாதேஷிட்மும் அயர்லாந்திடமும் தோற்றது… சோ, இங்கிலாந்து ஜெயிப்பதெல்லாம் பெரிய அணிகளோடுதான்!!! இந்தியாவைக் காட்டிலும் இப்பொழுது நல்ல அணியாகத் தெரிகிறது.  பேட்டிங்கைப் பொறுத்தவரை, ஜோனதன் ட்ராட் மிகச்சிறப்பான வெளிப்பாட்டுடன் பேட்டிங் செய்கிறார். ஆடவந்தால் ஒரு அரைசதம் உறுதி என்பது போல 6 போட்டிகளில் 4 அரைசதங்கள்… ஒரு போட்டியில் கிட்டத்தட்ட அரைசதம்… இவரை அவுட் ஆக்கினால் இங்கிலாந்திடம் ஆளில்லை எனச் சொல்லலாம். கேப்டன் ஸ்ட்ராஸ் இக்கட்டான சூழ்நிலைகளில் ஆடுகிறார். பெல்லும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.  பவுலிங்கில் ஸ்வான் மிரட்டுகிறார். ப்ரஸ்னன், ஆண்டர்ஸன் போன்றவர்கள் சுமார் ரகம் தான்.. எடுபடவில்லை..

2. தென்னாப்பிரிக்கா.

என்னதான் இங்கிலாந்துடன் எதிர்பாராதவிதமாகத் தோற்றாலும் இந்தியாவுடன் வெற்றி பெற்று தன்னை நம்பர் ஒன் டீம் என்று நிலைநிறுத்திக் கொண்டது. ஆம்லா, டீவில்லியர்ஸ், டுமினி, ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பதாலும், ஸ்மித், காலிஸ் போன்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஃபார்முக்குத் திரும்புவதாலும் நல்ல பேட்டிங் ஆர்டரை கைவசம் வைத்திருக்கிறது. அதேசமயம், மோர்கல், ஸ்டெயின், பீட்டர்ஸன், இம்ரான் தாஹீர் என பவுலிங் படையும் பலமாக இருக்கிறது. இம்ரானுக்கு அடிபட்டுவிட்டதால் இனி வருவாரா வரமாட்டாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆயினும் இந்தியாவின் அஸ்வின் போல இம்ரான் தாஹீர் மறைக்கப்படுகிறார் என்று பேச்சு எழுகிறது. பங்களாதேஷிடம் ஜெயிக்க வாய்ப்பு இருந்தாலும் ஒருவேளை தோற்றுவிடுமோ எனும் சந்தேகமுமிருக்கிறது… பங்களாதேஷ் அதிர்ச்சி வைத்தியங்கள் தரலாம்..

1. ஆஸ்திரேலியா

முன்பே சொன்னது போல ஆஸ்திரேலியா எந்த பிரச்சனையுமின்றி முதலிடம் பிடித்திருக்கிறது. அடுத்து வரும் பாகிஸ்தான் போட்டியில் தோற்றாலொழிய முதலிடத்தை அது தவறவிடாது. ஆனால் ஆஸி இதுவரை ஆடிய போட்டிகள் எல்லாமே சப்பை டீம் உடன் தான்!! அது வென்ற நான்கு அணிகளில் நியூஸிலாந்து மட்டுமே ஓரளவு சுமார் டீம்!! மீதி கென்யா, ஜிம்பாப்வே, கனடா… இலங்கையுடன் சரிவர ஆடமுடியாமல் போனதால் ஆஸியை இன்னும் கணிக்கமுடியவில்லை. ஏனெனில் இலங்கையின் சுழற்பந்து வீச்சுகளை இவர்கள் எப்படி தடுத்தாடப்போகிறார்கள் என்பதையும், ஆஸியின் சுழற்பந்து எப்படி மற்ற பேட்ஸ்மென்களுக்கு சவாலாக இருக்கப் போகிறது என்பதையும் இன்னும் அவதானிக்க முடியவில்லை. தவிர ஜிம்பாப்வே, மற்றும் கனடா ஆகிய அணிகளை நிறைய “அடிக்க” விட்டு அல்லது கொஞ்சம் சிரமப்பட்டுதான் ஜெயித்தது.. இதை ஏன் சொல்கிறேனெனில் முன்பிருந்த ஆஸியாக இருந்தால் இவர்களெல்லாம் நசுக்கப்பட்டிருப்பார்கள்!!! ஆதலால் ஆஸிக்கு இன்னும் போட்டியே துவங்கவில்லை என்று சொல்லலாம்!!

உத்தேசமாகக் காலிறுதிப் போட்டிகள் இப்படியாக இருக்கும்...

 ஆஸி - வெஸ்ட் இண்டீஸ்
இலங்கை - இங்கிலாந்து
நியூஸிலாந்து - இந்தியா
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா

அரையிறுதி

ஆஸி - இந்தியா
இலங்கை - தென்னாப்பிரிக்கா

நானும் பொடிப்பயலாக இருக்கும் நாளிலிருந்து கிரிக்கெட் பார்த்து வருகிறேன். எப்பொழுதெல்லாம் God of Cricket விக்கெட் விழுகிறதோ அப்பொழுதெல்லாம் தொடர்ந்து பல விக்கெட்டுகளைத் தானமாகக் கொடுக்கும் இந்தியா.. உலகக் கோப்பையைப் பொறுத்தவரை 1999 காலிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் டெண்டுல்கருக்குப் பிறகு நடையைக் கட்டிய வீரர்களைப் பார்த்த பொழுது சவுட்டால் அடிக்கலாமோ என்றெல்லாம் கோபம் வந்தது!! அப்போ சின்னவயசு!!

ஏன் சார் இப்படியெல்லாம் ஆகுது? டெண்டுல்கர் என்ற தனிமனிதனைத் தவிர தொடர்ந்து ஒழுங்காக ஆடும் ஒரு இந்தியனையாவது சொல்லுங்கள்??? யோவ்… அந்தாளுக்கு 37 வயசுய்யா… ராக்கெட்ல ஏறி உட்கார்ந்தமாதிரி சும்மா போய்ட்டே இருக்காரு!! மத்தவங்கள்லாம் என்னதான் பண்றாங்க?

267 க்கு ஒன்னு… யாராச்சும் அந்த நேரத்தில கக்கூஸ் போய், இந்நேரம் இந்தியா 290 அடிச்சிருக்கும், 300…. 320…. 340 என்று கனவு கண்டு கொண்டிருந்தார்களென்றால் அவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருப்பார்கள் மிடில் டூ லோயர் ஆர்டர் பேட்ஸ்மென்கள்!! ங்கொய்யால 13 ரன்னுக்கு 7 விக்கெட்!!! தாங்குமாய்யா?

இதில பெரிசா பேசுவாய்ங்களே…. டெண்டுல்கர் சதம் அடிச்சா டீம் தோத்துடும்பா… அட அறிவுகெட்டவிங்களா, டெண்டுல்கர் மட்டும் ஆடினா போதுமா? மத்தவங்களும் ஆடினாத்தானே டீம் ஜெயிக்கும்?? அந்தாளை ஒருபயலும் குறை சொல்லவே முடியாது!!! 37 வயசுல இப்படி ஆடின ஒரு ஆளையாவது காண்பிங்க பார்ப்போம்??

தொலைஞ்சுதுபோ… இனிமே ரசிகர்களெல்லாம் கெஞ்சுவாங்க…. டெண்டுல்கர் சார்… இனிமே அவுட் மட்டும் ஆகிடாதீங்க!! அப்படியே ஆனாலும் டீம் ஸ்கோரை 300 க்கு கொண்டுவந்துடுங்க…. இல்லாட்டினா பயபுள்ளைங்க 50 க்கே ஆல் அவுட் ஆவானுங்க….

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தோற்றதற்கு நெஹ்ரா மட்டுமில்லை, டெண்டுல்கர், சேவக், காம்பிர், ஜாஹிர் தவிர மற்ற அனைவரும் காரணமே!! எப்பொழுதெல்லாம் அணி, ஒன்றாக ஆடுகிறதோ அப்பொழுதெல்லாம் வெற்றி எளிதாகக் கிடைத்துவிடும்!

எனக்கென்னவோ, லீக் போட்டிகளெல்லாமே கொஞ்சம் ட்ரமாட்டிக்கா தெரியுது. இங்கிலாந்துகிட்டல்லாம் தோற்கிற டீமில்லை தென்னாப்பிரிக்கா!!! இந்தியா, தென்னாப்பிரிக்காவிடம் தோற்கும் என்பதை முன்பே கூறியிருந்தேன்… ட்ரமாட்டிக்காக இருப்பது உண்மையானால் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்பது என் கணிப்பு!!!

பார்ப்போம்!!

வேலைப்பளு அதிகமாக இருப்பதால் அதிகம் எழுதமுடியவில்லை நண்பர்களே… சென்ற பதிவில் பின்னூட்டியவர்களுக்கு நன்றி.. அண்ட் கவனத்தில் கொள்ளுகிறேன்!!

நியூஸிலாந்து பாகிஸ்தான் போட்டியில் நியூஸிலாந்து ஜெயிக்கும் என்றே அதிகம் எதிர்பார்த்தேன். ஏனெனில் நடக்கும் ஒவ்வொரு போட்டிகளும் ஒரு அணிக்கு மேல் இன்னொரு அணி என்று ஒவ்வொன்றும் தனது திறமையை நிரூபிக்கின்றன. கொஞ்சம் ஃபிக்ஸிங் போலத் தோன்றினாலும் எந்தவொரு போட்டியையும் யாரும் எளிதில் எடைபோட்டுவிட முடியாதல்லவா? சிலசமயம் அதிர்ச்சிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

நியூஸிலாந்தின் அசுரத்தனமான ஆட்டத்தைப் பார்த்துவிட்டு வாயடைத்துப் போனேன். போட்ட பாலெல்லாம் சிக்ஸருக்கு விரட்டிய ரோஸ் டெய்லர், இந்தியாவுக்கு எதிராக இப்படி ஆடியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று தோணியது!! 47 மற்றும் 49 வது ஓவர்களில் மட்டும் மொத்தம் 58 ரன்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன!!! பாகிஸ்தான் இறுதிகட்டத்தில் ரொம்பவும் பதட்டத்தோடுதான் பந்துவீசியது. சோயப் அக்தர், எல்லா பாலையும் ஃபுல்டாஸாகவே வீசினார். அப்துல் ரசாக்கின் பந்து விக்கெட்டை எடுக்கும்படியான நேக்கில் போடப்படவேயில்லை.

பாகிஸ்தான் தோற்றதால் ஜிம்பாப்வேக்கு அடுத்து வரும் ஆஸ்திரேலியா போட்டியை ஜெயித்தாலொழிய முதலிடத்திற்கு வரமுடியாது. மாறாக நியூஸிலாந்து இலங்கையை வென்றுவிட்டால் பாகிஸ்தான் குழுவின் இறுதிக்கு வந்துவிடும்!! (குழு B யில் இந்தியா முதலிடம் பெற்றால் இந்தியா பாகிஸ்தான் காலிறுதி நடைபெறும்.)

எனது நண்பரின் கணிப்பு, இந்தியா பாகிஸ்தான் அரையிறுதியில் மோதும் என்பது!!


நேற்றைய போட்டியில் நெஹ்ரா இறங்கினார். தோனி அவருக்கு அதிகம் வாய்ப்பு தரவில்லை என்றாலும் சிறப்பான பவுலிங் நெஹ்ராவிடமிருந்து வந்தது. தற்போது இரண்டு சீமர்ஸும் மகிழ்ச்சியளிக்கிறார்கள்.. இன்னும் ஹர்பஜன் மட்டும் சுழற்றிக் கொண்டுதான் இருக்கிறார்… (இலங்கையில் முரளிதரனும் அப்படித்தான்… )

பவுலிங் ஓரளவு திருப்தியைத் தந்தாலும், பேட்டிங்கில் சொதப்பினார்கள். விரைவில் வெற்றி பெறவேண்டும் என்று விரும்பிய தோனி, அடித்து ஆட சேவக்கையும் சச்சினையும் நிர்பந்தித்தார். விரைவாக அடித்தாடும் நோக்கில் எல்லா பந்தையும் காட்டுத்தனமாக சுற்றி சேவக் அவுட் ஆனார்.. சச்சினும் முடிந்தவரை அடித்துவிட்டு கிளம்பிப் போனார்… ஒரு மாற்றலாக இறங்கிய யூசுப் பதான் ஒரு சிக்ஸர் அடித்ததோடு சரி, பயிற்சிக்காக வந்து பத்து ரன்கள் மட்டுமே எடுத்து கடுப்பேத்தினார்..  100 ரன்கள் அடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. 15 ஓவர்களில் நூறைக் கடந்த இந்தியா அதற்கடுத்த நூறைக் கடக்க இருபது ஓவர்களுக்கும் மேலானது!!

எப்படியோ யுவ்ராஜ் புண்ணியத்தில் ஜெயித்தாலும், இந்தியா பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் ஆகியவ்ற்றில் ஏதோவொரு குறை இருந்து கொண்டே இருக்கிறது!!!

இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு வரமாட்டேன்.. (கிரிக்கெட் பார்ப்பது நிறுத்தமாட்டேனென்பது வேறு விஷயம்..) கொஞ்சம் பொறுத்தருள்க!!!

உலகக் கோப்பையின் விறுவிறுப்பான ஆட்டங்கள் தொடங்கி வருகின்றன. கணிப்புக்கள் தவறாகவும், எதிர்பாராததாகவும், ஆச்சரியம் அளிக்கும் விதத்திலும் இருந்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் பலவீனமான அணி பலமாகவோ, அல்லது பலமான அணி பலவீனமாகவோ தெரிகிறது.

Result

இலங்கை 146/3 ,
No Result

இலங்கை ஆஸ்திரேலியா போட்டியை மிகவும் எதிர்பார்த்தேன். இலங்கை முதலாவதாக பேட் செய்ய பணித்திருப்பதால் அன்றைய போட்டியில் ஜெயிக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் காலநிலை போட்டியின் முடிவை  மாற்றிவிட்டது. இருப்பினும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கெதிரான இலங்கையின் பேட்டிங் துணிச்சலாகவும் பாராட்டக் கூடியதாகவும் இருந்தது. குறிப்பாக சங்ககராவின் ஆட்டம். தொடர் முழுக்க நன்கு ஆடிவரும் சங்ககரா, விட்டிருந்தால் சதம் அடித்திருக்கக் கூடும். இலங்கை – ஆஸ்திரேலியா போட்டிக்கு மட்டும் என்ன துரதிர்ஷ்டமோ தெரியவில்லை, மழையின் குறுக்கீடு நிகழ்ந்து வருகிறது. சென்ற 2007 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் மழையின் குறுக்கீடு இருந்தது. ஆனால் வழக்கம் போல இலங்கையின் டாப் ஆர்டர் பலமில்லை என்பதை உறுதியாகக் காணமுடிகிறது. தில்ஷான் இன்னும் தனது பங்களிப்பைத் தரவேயில்லை. ஒவ்வொரு முறையும் சங்ககராதான் அணியின் வீழ்ச்சியைக் காப்பாற்றி வருகிறார். எப்படியோ, போட்டியின் முடிவு தெரியாமல் போய்விட்டதால் “சப்பென்று” ஆகிவிட்டது.


இலங்கை ஆஸி போட்டியைப் போலவே மிகவும் ஆவலாக எதிர்பார்த்த போட்டி இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி.

129493

Result

இங்கிலாந்து 171
தென்னாப்பிரிக்கா 165

6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் என சகலதுறைகளிலும் வல்லவர்களான தென்னாப்பிரிக்கா, இம்மூன்றிலும் சொதப்பி, கத்துக் குட்டி அணியான அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்தை எதிர்கொண்டது. ஸ்ட்ராஸ் மற்றும் பீட்டர்சன் இருவருமே முதல் ஓவரிலேயே வெளியேறிவிட, இங்கிலாந்து அதிகம் ரன்களை எடுக்காது என்றே நினைத்தேன். ஆனால் சமிபகாலங்களில் நன்றாக ஆடிய ட்ராட்டும், ரவி பொபாராவும் ஓரளவு நல்ல பார்ட்னர்ஷிப் தந்தார்கள். இருப்பினும் வேறு எவருமே ஒழுங்காக ஆடவில்லை. தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹீர் மீண்டும் ஒரு நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 171 ரன்கள் என்பது தென்னாப்பிரிக்காவுக்கு அல்வா சாப்பிடுவது போல… எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது.

அல்வா சாப்பிடுகையில் தொண்டை விக்கிவிட்டதைப் போல தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மென்கள் ஆடியதைப் பார்க்கவே முடியவில்லை. ஆம்லாவும் ஸ்மித்தும் நல்ல துவக்கத்தைத் தந்திருந்தாலும் காலிஸ் இன்னும் ஆடாமலேயே இருப்பது தென்னாப்பிரிக்காவுக்கு பாதகமான விஷயமாக இருக்கிறது. ஆவலோடு எதிர்பார்த்த டிவில்லியர்ஸும் 25 ல் நடையைக் கட்டினார். டுமினி மிக மோசமாக ஆடி தோல்விக்குத் தனது பங்கை அள்ளிக் கொடுத்தார். இருப்பினும் கடைசி வரைக்கும் நம்பிக்கை இருந்தது. ஸ்டைனின் ஆட்டம் தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை தந்திருக்கக் கூடும். ஆனால் திடீரென மூன்று விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்காவே எதிர்பார்த்திருக்காது. ஸ்டைனின் விக்கெட் விழுந்ததும் அது தோல்வியைத் தழுவிக் கொண்டது.

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருக்கிறது என்பதைத்தான் இன்னும் நம்பவேமுடியவில்லை. தொடரிலேயே ஷாக் கொடுக்கும் ஒரே அணி இங்கிலாந்தாகத்தான் இருக்கும். இந்தியாவோடு 339 ரன்னை சமப்படுத்தியது, அயர்லாந்தோடு தோற்றது, பின் எப்படி எழுச்சி பெற்றதோ தெரியவில்லை, தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்திருக்கிறது. மிக மோசமான அணி என்று இங்கிலாந்து ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி, திடீரென எழுச்சி பெற்றது எப்படி? இந்த போட்டிகளில் இன்னும் தோற்காத அணிகள் ஒருவேளை தோற்கடிக்கப் படுமோ?


Result

அயர்லாந்து  207
இந்தியா 210/5

5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

129500இந்தியர்களைப் பொறுத்தவரையில் 300 ரன்களையும் சிரமப்பட்டுத்தான் ஆடுவார்கள், 200 ரன் சேஸிங்கையும் சிரமப்பட்டுத்தான் ஆடுவார்கள். நேற்று அப்படித்தான் நிகழ்ந்தது. அயர்லாந்தை 207 ரன்னில் சுருட்டி, பவுலிங் திறமையை சுமாராக நிரூபித்தாலும் ஜெயிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது.

ஜாஹீரின் முதல் ஓவரிலேயே இந்தியர்களின் ஃபீல்டிங் திறமை தெரிந்து போனது. ஒரு எளிய கேட்சை விட்டார் பதான். ஆனால் ஜாஹீரின் இன்சுவிங் ஒன்றினால் striling அவுட் ஆக அதற்கடுத்த இரண்டாவது ஓவரில் இன்ஸைட் எட்ஜ் ஆகி ஜாய்ஸும் போய்விட அதற்காகவே ஜாஹீரின் பவுலிங்கைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாமோ என்று தோணியது. ஆனால் அயர்லாந்து கேப்டன், அரைசதமாவது அடிக்காமல் போகமாட்டேன் என்று அடம்பிடித்தார். கூடவே நீல் ஓ ப்ரயனும் சேர்ந்து கொள்ள, 3 வது விக்கெட்டுக்கு நூறு ரன்களைச் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார்கள். நானும் 250 க்கும் மேல் அடிப்பார்கள் என்று நம்பியிருந்த சூழ்நிலையில் யுவ்ராஜின் மாயாஜால சுழற்சி கைகொடுத்தது. அவரின் விக்கெட்டுகளிலேயே கெவின் விக்கெட்டுதான், சிறப்பு. பெரிய விக்கெட்டும் கூட.. ஹர்பஜன், சாவ்லா ஆகியோருக்கு ஒரு பழமும் விழுகவேயில்லை. 5 விக்கெட்டும் 50 ரன்னும் எடுத்து மேன் ஆஃப் த மேட்ச் வாங்கிய யுவ்ராஜுக்கு அது ஒரு உலகக்கோப்பை சாதனையும் ஆகும்.

எதிர்த்தாடிய இந்தியாவோ மோசமான முறையில்தான் விக்கெட்டை பறிகொடுத்தார்கள் என்று சொல்லவேண்டும். ஷேவாக்கின் மெதுவான ஆட்டம் எட்ஜ் ஆகி ஜான்ஸன் கையில் விழுந்தது. அரைசதம் அடிப்பார் என்று (சதம் அடிப்பார் என்றும்) நம்பியிருந்த சச்சின் தேவையில்லாத ஸ்வீப் ஷாட்டில் வெளியேறினார். மொத்தத்தில் உறுப்படியாக ஆடியது சச்சினும் யுவ்ராஜும் தான். யுவ்ராஜினால் கோலி ரன் அவுட் ஆனது மிக மோசமான அண்டர்ஸ்டாண்டிங்.

யூசுப் பதான் இறங்குகையில் ரசிகர்களின் ஆராவாரம் மிகுதியானது. அதற்கேற்ப அவரும் விருந்து படைக்க தவறவில்லை. முதல் ஓவரிலேயே சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசினாலும், யுவ்ராஜின் அரைசதத்திற்காக காத்திருந்து மெல்ல ஆடினார். 46 வது ஓவரில்தான் இந்தியாவால் வெற்றியை ருசிக்க முடிந்தது. அயர்லாந்தின் பவுலிங் குறிப்பிடத்தக்கதொன்று. ட்ரண்ட் ஜான்ஸன், டாக்ரெல், ரான்கிங் ஆகியோரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஷேவாக்கின் விக்கெட்டை வீழ்த்திய ஜான்ஸனின் சிக்கன் டேன்ஸ் ரசிக்கும்படி இருந்தது! 129513

இன்னும் இந்திய அணி பற்றிய என் கருத்தை மாற்றிக் கொள்ளமாட்டேன். மோசமான ஃபீல்டிங், பவுலிங் ஆகிய்வற்றிலிருந்து மீளவேண்டும். அடுத்து வரும் நெதர்லாந்து போட்டியில் எப்படியும் ஜெயிப்பார்கள் (இல்லாவிட்டால் கல்லடி விழும்) என்றாலும் தென்னாப்பிரிக்காவுடனான போட்டியில்தான் முழுபலமும் தெரியவரும்… நான் நினைக்கிறேன், தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா தோற்றுவிடும் என்று. பார்ப்போம்.

அப்ப்றம் ஒரு விஷயம்…. சென்றமுறை இங்கிலாந்து போட்டியின் போது 2.5 மீட்டர் LBW வில் தோனி தனது கோபத்தை ஐசிசிக்குத் தெரிவித்ததாலோ என்னவோ, இப்போது அந்த விதியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அயர்லாந்து வீரர் அலெக் குசக்கின் விக்கெட் மாற்றம் செய்யப்பட்ட விதியின் மூலம் வீழ்ந்தது.


தற்போதய நிலவரப்படி புள்ளிபட்டியல்

புள்ளிப் பட்டியல் :

Group A

Teams    Mat Won Lost    Tied /NR  Pts
Pakistan 3 3 0 0 6
Sri Lanka 4 2 1 1 5
Australia     3 2 0 1 5
New Zealand 3 2 1 0 4
Zimbabwe     3 1 1 0 2
Canada     3 0 3 0 0
Kenya 3 0 3 0 0

Group B

Teams    Mat Won Lost    Tied    Pts
India         3 2 0 1 5
England     4 2 1 1 5
West Indies    3 2 1 0 4
South Africa 3 2 1 0 4
Ireland 3 1 2 0 2
Bangladesh    3 1 2 0 2
Netherlands 3 0 3 0 0


புள்ளிவிபரங்கள் (07-03-11 வரை)

அதிக ரன்கள்

ஸ்ட்ராஸ் 280
டீ வில்லியர்ஸ் 266
சங்ககரா 241
ட்ராட் 222
ஷேவாக் 215

அதிக விக்கெட்டுகள்

அப்ரிடி 14
இம்ரான் தாஹீர் 11
ரோச் 10
ஜான்ஸன் 8
பென் 8

சதமடித்தவர்கள் (முதல் ஐந்து பேர்)

ஸ்ட்ராஸ் 158
டீவில்லியர்ஸ் 107, 134
ஷேவாக் 175
ஆம்லா 113
கெவின் ஓ ப்ரயன் 113

படங்கள் மற்றும் புள்ளிபட்டியல் உதவி : Cricinfo இணையதளம்

சென்ற இரண்டு வாரங்கள் முழுக்க எந்த சேனலும் அனுமதிக்கப் படவேயில்லை. ESPN, Star Cricket, Star Sports என மூன்று சேனல்களையும் மாற்றி மாற்றி போட்டு சீரியல் பைத்தியங்களின் கோபத்திற்கு எல்லாரும் உள்ளாகியிருப்பார்கள். ஏப்ரல் வரைக்கும் இதே கதிதான். அதற்குப் பின்னர் அரசியல், தேர்தல் பரபரப்பு, வாக்கு, ஆட்சி என்று ஜூன் வரைக்கும் சேனல்கள் பிஸி.

இன்று மதியத்திற்கு மேல் எந்த வீட்டிலும் மருந்துக்குக் கூட சன் டிவியோ, கே டிவியோ ஓடாது என்று நினைக்கிறேன். உலகக் கோப்பையின் மிக முக்கியமான, எல்லாரும் எதிர்பார்க்கும் மேட்ச், இலங்கை – ஆஸ்திரேலியா மேட்ச். ப்ரடிக்‌ஷன்கள் ஒத்துவராது என்பதால் அட்லீஸ்ட் முதல் இன்னிங்ஸ் வரைக்குமாவது பொறுத்திருப்போம்.

கிரிக்கெட்டுக்கு இடையே, Best of luck Sachin எனும் விளம்பரம் போடப்படுகிறது. குழந்தைகள் எல்லாரும் சச்சினை தயார் செய்து கிரவுண்டுக்கு அனுப்புவது போல இருக்கும் அந்த விளம்பரத்தில் சிறுமி ஒருத்தி வந்து “ பெஸ்ட் ஆப் லக் சச்சின்” என்று சொல்வது செம க்யூட். அநேகமாக எல்லாரும் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்கு வீடியோ இணைத்துள்ளேன். பாருங்கள்.

சென்ற ஐபில் களில் கோலோச்சிய வோடபோன் ஜூஜூ முட்டை பொம்மை விளம்பரங்கள் மீண்டும்…. இந்த கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது கமிங் சூன், கமிங் சூன் என்று இரண்டு விளம்பரங்கள் மனதைக் கவராத வண்ணத்தில் வந்து கொண்டிருந்த பொழுது, படாரென ஒரு மாற்றம். Vodafone 3G என்று ஒரு விளம்பரம் வந்திருக்கிறது. ஒரு ஜூஜூ தெருவின் ஓரத்திலிருக்கும் பெட்டிக்குள் சென்று ஜூப்பர் மேன் மாதிரி மாறி வெளியே வருகிறது. பழைய ஜேம்ஸ்பாண்ட் பேக்ரவுண்ட் ஸ்கோர் இசைக்க, ஜூப்பர் மேனாக பறக்கிறது. சாய்ந்துவிழும் கட்டிடத்திலிருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறது. புரியாத புதிர்களைத் தீர்த்துவைக்கிறது. துப்பாக்கியின் தோட்டாவை விடவும் வேகமாக ஓடுகிறது, பாதாளத்தில் விழுந்துவிடாமல் ரயிலை காக்கிறது.. அவ்வளவு ஏன், பூமியின் வேகத்தையே அதிகப்படுத்திவிடுகிறது!!!  3G க்கு இதைவிட மிக அருமையாக விளம்பரம் எடுக்க முடியாது! மிஸ் பண்ணிடாதீங்க… பாருங்க…

சன் டிவியில் தங்கமழை என்று ஒரு கேம் ஷோ ஓடுகிறது. அதில் குடும்பத்திலிருக்கும் நான்கு பேர் கலந்து கொள்ள, 16 கேள்விகள் கேட்கப்படுகிறது. எல்லா கேள்விகளுக்கும் சரியான விடை சொல்பவர்களுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படுகிறதாம்…. யாருகிட்ட கதை விடுறீங்க??

கேள்விகள் எல்லாம் மிகவும் கடினமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பெயர் என்ன?, ரஜினி, இயந்திரமாக நடித்த படத்தின் பெயர் எந்திரன் என்பது சரியா தவறா? போன்ற மிகக் கடினமான கேள்விகள்.. ஒவ்வொரு ரவுண்டுக்கும் கிராம் கணக்கில் பரிசு ஏறிக் கொண்டே இருக்கிறது. அதிலும் கேள்வி கேட்கும் அந்த பெண் ஏதோ சரக்கடித்துவிட்டு வந்து பேசுவதைப் போல அழுத்தி நிறுத்தி நிதானமாகப் பேசுகிறாள்….

அட அறிவுகெட்ட சண்டிவி காரனுங்களா, அவனவன் நல்லா படிச்சுட்டு பொது அறிவுல புலியா இருந்தும் ஒண்ணும் பண்ணமுடியாம இருக்கானுங்க, இவுங்க முட்டாள்தனமான கேள்வியைக் கேட்டுட்டு 1 கிலோ தங்கம் தராங்களாம்… நம்பறமாதிரியா இருக்கு??? நல்லா படிக்கிற மாணவர்கள்கிட்ட சிக்கலான கேள்வியைக் கேட்டு பணம் கொடுத்தா அது எப்படியிருக்கும்???

இன்னிக்கு 22 காரட் தங்கம் 1 கிராம் 2000 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள், 1 கிலோவுக்கு ஆயிரம் கிராம். சோ, 1000 X 2000 = 2 கோடி ரூபாய் ஆகிறது!!! சன் டிவி அள்ளிக் கொடுக்கும்னு நினைக்கிறீங்களா??? மானமுள்ள எவனும் நிகழ்ச்சியில பங்கெடுத்துக்கவே மாட்டான்….

129350

Result

தென்னாப்பிரிக்கா 351/5
நெதர்லாந்து 120

231 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

ஒரு பயிற்சி ஆட்டம் போல இருந்தது தென்னாப்பிரிக்காவுக்கு.  ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸுடனான மேட்சில் ஒழுங்காக ஆடாத ஆம்லா, தனது ஃபார்மை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் நெதர்லாந்து மேட்சில் தெரிந்தது. இந்த தாடிக்கார பயபுள்ள நின்றால் ஒரு சதம் அல்லாவிட்டால் அரைசதமாவது அடித்துவிட்டுப் போவது மற்ற அணியினரை ரொம்பவே பயப்படச் செய்கிறது. இவர் போகிற வேகத்தைப் பார்த்தால், சச்சினாவது ரிச்சர்ட்ஸாவது….  எப்படியோ ஆம்லா, முதல் உலகக் கோப்பை சதத்தை அடித்து தன்னுடைய இடத்தை நிலைநிறுத்தியிருக்க, மறுபக்கம் டீ வில்லியர்ஸின் ருத்ரதாண்டவம் மிரட்டும் வகையிலிருந்த்து. இருவரும் மாறி மாறி சதமடிக்க, நான் நினைத்துக் கொண்டேயிருந்தேன்.. எதற்கு இவ்வளவு பில்டப்?? டீ வில்லியர்ஸின் ரன் எண்ணிக்கையைக் கூட மொத்த அணியே எட்டமுடியாமல் 120 க்கே ஆல் அவுட்.. ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆத்தறாங்க? டீவில்லியர்ஸ் ஆடிய இரண்டு போட்டிகளிலும் சதம்!!! ங்கொய்யால!!

நெதர்லாந்தின் ஒரே ஒரு நம்பிக்கை டசாட்டே தான். அதுவும் முதல் ஆட்ட சதத்தில் சவாலான அணியாக இருக்குமென்று பார்த்தால், அடுத்தடுத்து புஷ் ஆகிவிட்டது. 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவுகிறார்கள். இப்பொழுதுள்ள புள்ளிவிபரத்தின் படி கென்யாவைக் காட்டிலும் மிக மோசமான அணி நெதர்லாந்து.

இதை விடுவோம். அடுத்து பாகிஸ்தான் கனடா மேட்சைப் பார்ப்போம்.

Result

பாகிஸ்தான்  184
கனடா 138

46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

சின்ன அணியுடனான மேட்ச் என்றாலும் விறுவிறுப்பாகவும், பெருத்த ஏமாற்றத்துடனும் இருந்தது. இது பாகிஸ்தான் கனடா மேட்ச் மாதிரியே தெரியவில்லை. கனடா வீரர்கள் பெரும்பாலும் இந்தியர்களாகவே இருந்தனர். கனடா ஒருவேளை ஜெயித்திருந்தால் இந்தியர்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் ஜெயிக்கும் சூழ்நிலையை கனடா தவறவிட்டது. பாகிஸ்தானில் உமர் அக்மலைத் (42) தவிர மற்ற அனைவரும் 20 ஐத் தாண்டுவதில் சிரமப்பட்டார்கள். மொத்த அணியே 184 ரன்களுக்குள் கனடா வீரர்கள் சுருட்டினார்கள். அது பாராட்டத்தக்கதொன்று. ஏனெனில் இதே மைதானத்தில்தான் பாகிஸ்தான் இலங்கையுடன்  277 ரன்கள் எடுத்திருந்தது. 129383.2

பாகிஸ்தானின் ஓபனர்கள் இன்னும் நிலையாக ஆடமாட்டேன்கிறார்கள். சின்ன அணிகளோடும் லீக் போட்டிகளிலும் தப்பித்துவிடலாம், அடுத்து வரும் நாக் அவுட் போட்டிகளுக்கு ஓபனர்கள் மிகவும் முக்கியம், ஆனால் அதேசமயம் மிடில் ஆர்டர் பலமாக இருக்கிறது. மிஸ்பா, உமர்குல், யூனிஸ்கான், அப்ரிடி வரை நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். மாறாக கனடா பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. 100 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இருந்த கனடா ஜெயித்திருக்க அதிக வாய்ப்பு இருந்தது. ஹன்ஸ்ரா, சர்காரி, பாகாய் போன்று சிலர் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகம் ரன் எடுத்திருக்கலாம். ஓபனர்களும் அதிக மேட்சுகளில் விளையாடியவர்கள் கிடையாது. அப்ரிடி பவுலிங் போட வந்தபொழுதே கனடா நொறுங்கிப் போனது.  வெறும் 23 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைப் பறித்தார். அவரைப் பற்றிய ஒருசில சாதனைத் துளிகள்.

  • உலகக் கோப்பையில் 5 மற்றும் நான்கு விக்கெட்டுகளை மூன்று முறை எடுக்கும் முதல் பவுலர் அப்ரிடி.
  • 14 விக்கெட்டுகளுடன் இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் இன்னும் 5 விக்கெட்டுகள் எடுக்கும் பட்சத்தில் ஒரே உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்தவரான வாசிம் அக்ரமின் (18) சாதனையை முறியடிக்கலாம்
  • அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் குறைந்தது 4 விக்கெட் எடுப்பது இதுவரை ஒன்பது முறை நிகழ்ந்திருக்கிறது. அதில் வக்கார் யூனிஸ் மூன்று முறை நிகழ்த்தியிருக்கிறார்.

கிடைத்த ஒரே வாய்ப்பை நழுவிய கனடா அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று ஆறுதலாக ஊருக்குப் போய்ச் சேரட்டும். இன்று (04-03-11) நிகழ்ந்த “குட்டி” மேட்ச்கள் பற்றி பார்ப்போம்.

Result

ஜிம்பாப்வே 162
நியூஸிலாந்து 166/0

பத்துவிக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி

129408காலையில் மேட்ச் இருக்குமென்றே தெரியவில்லை. டிவியைப் ஒளித்துப் பார்த்தால் யாரும் ஆடிக் கொண்டிருக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது ஜிம்பாப்வே நியூஸிலாந்து மேட்ச் சீக்கிரமாகவே முடிந்துவிட்டது என்று. ஓரளவு சுமாரான அணியிடம் மண்ணைக் கவ்வும் நியூஸிலாந்து மட்டமான அணியைப் போட்டுத் தாக்குகிறது. இது அதன் முதல் மேட்சிலிருந்து பார்க்கலாம். ஆஸியிடம் வாங்கிய அடியை ஜிம்பாப்வேயிடம் திருப்பிக் கொடுத்திருக்கிறது.  ஜிம்பாப்வேயோ, ஆஸியைக் கட்டுப்படுத்திய effort நியூஸிலாந்திடம் காண்பிக்காமல் விட்டுக் கொடுத்திருக்கிறது. எப்படியும் நியூஸிலாந்து ஜெயித்துவிடுவார்கள்தான், என்றாலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்ததெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்…. தவிர நியூஸிலாந்து இரண்டுமுறை 10 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.  இந்த திறமையை பாகிஸ்தானுடனோ, இலங்கையுடனோ காட்டுவார்களா?

Result

பங்களாதேஷ் - 58
வெஸ்ட் இண்டீஸ் – 59 /1 (12.2 ஓவர்கள்.)

9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

மொத்தமே 30 ஓவர்கள்தான் வீசப்பட்டன. 117 ரன்கள் தான் இரு அணியினராலும் எடுக்கப்பட்டன. இப்படியொரு மகா கேவலமான தோல்வியை தனது மண்ணில், தனது ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கக் கூடாது பங்களாதேஷ். மேட்ச் நடப்பதற்கு முன்னர் நான் பங்களாதேஷ்தான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். காலிறுதிக்கு பங்களாதேஷ் வந்தால் அந்த அணி சற்று உற்சாகத்துடன் இருக்குமென்று நம்பியிருந்தேன். சொல்லப் போனால் 129417இரண்டுபேருக்குமே இது மிக முக்கிய மேட்ச். இந்தியாவிடம் பங்களாதேஷும், தென்னாப்பிரிக்காவுடன் வெஸ்ட் இண்டீஸும் தோற்றதால் நான்காமிடத்திற்கு இவ்விரு அணிகளிடையே ஒரு போட்டி இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸிடம் அவ்விடத்தைப் பறிகொடுத்திருக்கிறது. 

பழைய பங்களாதேஷைப் பார்ப்பது போல இருந்தது. மிகமோசமான ஆட்டம், தொடர்ந்து ஓவருக்கு ஓவர் விக்கெட்டுகள் என படுகேவலமான பேட்டிங், கிரவுண்ட் முழுக்க அமைதி மட்டும்தான் இருந்தது. கேப்டன் ஷாகிப், மக்களின் கோபத்தைப் புரிந்து கொண்டு வரும் போட்டிகளில் இரண்டில் வெற்றி பெறுவோம் என்று தோல்வியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.. கடந்த இரண்டு வருடங்களில் பங்களாதேஷுக்கு இது மிகப்பெரிய தோல்வி!

இன்னும் மூன்று மேட்சுகள் பங்களாதேஷுக்குக் காத்திருக்கின்றன. அவற்றில் நெதர்லந்து மேட்ச் தவிர, மீதி இரண்டும் பெரிய மேட்சுகள். ஒன்று இங்கிலாந்துடனும் (இன்னுமா நம்பறேன்?) இன்னொன்று தென்னாப்பிரிக்காவுடனும். அதேபோல் நிலைமைதான் வெஸ்ட் இண்டீஸுக்கும். வெஸ்ட் இண்டீஸும் பங்களாதேஷும் ஒருவேளை ஒரே புள்ளியில் இருந்தாலும் ரன் ரேட்டில் வெஸ்ட் இண்டீஸ் முன்னேறிவிடும்.  இப்போதைக்கு இவ்விரு அணிகளுக்குள்ளும்தான் போட்டியே… இங்கிலாந்து யாரிடம் தோற்கிறதோ அவர்கள் நான்காமிடத்தை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதோடு, இங்கிலாந்தும் நான்காமிடப் போட்டிக்கு வந்துவிடும்!! பொறுத்திருந்து பார்ப்போம்.


தற்போதய நிலவரப்படி புள்ளிபட்டியல்

புள்ளிப் பட்டியல் :

Group A

Teams    Mat Won Lost    Tied    Pts
Pakistan 3 3 0 0 6
Sri Lanka 3 2 1 0 4
Australia     2 2 0 0 4
New Zealand 3 2 1 0 4
Zimbabwe     3 2 1 0 2
Canada     3 0 3 0 0
Kenya 3 0 3 0 0

Group B

Teams    Mat Won Lost    Tied    Pts
South Africa 2 2 0 0 4
West Indies    3 2 1 0 4
India         2 1 0 1 3
England     3 1 1 1 3
Ireland 2 1 1 0 2
Bangladesh    3 1 2 0 2
Netherlands 3 0 3 0 0

 


புள்ளிவிபரங்கள் (04-03-11 வரை)

அதிக ரன்கள்

ஸ்ட்ராஸ் 280
டீ வில்லியர்ஸ் 241
ஷேவாக் 210
மிஸ்பா உல் ஹக் 185
பெல் 184

அதிக விக்கெட்டுகள்

அப்ரிடி 14
ரோச் 10
ஜான்ஸன் 8
பென் 8
இம்ரான் தாஹீர் 7

சதமடித்தவர்கள் (முதல் ஐந்து பேர்)

ஸ்ட்ராஸ் 158
டீவில்லியர்ஸ் 107, 134
ஷேவாக் 175
ஆம்லா 113
கெவின் ஓ ப்ரயன் 113

பெரிய ஸ்கோர் இந்தியா – (பங்களாதேஷ்) 370 ரன்கள்
பெரிய வெற்றி தென்னாப்பிரிக்கா –(நெதர்லாந்து) 231 ரன்கள் வித்தியாசம்
  நியூஸிலாந்து – (கென்யா) 10 விக்கெட் வித்தியாசம்
அதிக சிக்ஸர்கள் கெவின் ஓ ப்ரயன் 7 சிக்ஸர்கள்
அதிக கேட்ச் தில்ஷான் 4

படங்கள் மற்றும் புள்ளிபட்டியல் உதவி : Cricinfo இணையதளம்

129298இம்முறை கனடா ஜிம்பாப்வே பற்றியோ, இலங்கை – கென்யா பற்றியோ, நெதர்லாந்து – வெஸ்ட் இண்டீஸ் பற்றியோ எழுதப்போவதில்லை. ஏனெனில் இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதும், எவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பதும் முன்பே கணித்த விஷயம்தான். ஆனால் போன பதிவில் சொன்னது போல கணிப்பில் தவறிய, இந்த உலகக் கோப்பையின் மிக முக்கிய திருப்பங்களான போட்டிகளில் ஒன்றாக இங்கிலாந்து – அயர்லாந்து போட்டி உண்டாகுமென்று நினைக்கவேயில்லை.

இங்கிலாந்து – அயர்லாந்து

இங்கிலாந்து – 327/8
அயர்லாந்து  - 329/7

3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி

துரதிர்ஷ்ட வசமாக இந்த போட்டியை காணும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இங்கிலாந்துதான் வெற்றி பெறும் எனும் நம்பிக்கையோடு வெளியூர் கிளம்பி மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தால் Ireland won by 3 wickets என்று டிவியில் ஃப்லாஷ் செய்து கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நஞ்சமல்ல, ரொம்பவே ஏமாற்றம்தான். ஹைலைட்ஸ் மட்டும்தன் பார்க்க முடிந்தது. அயர்லாந்தின் பேட்டிங் பலம் என்று சொன்னால் அது ப்ரயன் சகோதர்கள் தான். 2007 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் முதல்சுற்றுடன் வெளியேற முழு முதற்காரணம் இவர்கள் இருவரின் ஆட்டம் நிலையான ஆட்டமும் ஃபார்ம் இல்லாத பாகிஸ்தான் வீரர்களும்தான். அந்த போட்டியில் நீல் ஓ ப்ரயன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேன் ஆப் த மேட்ச் விருதும் பெற்றிருந்தார். இம்முறை சகோதரர் கெவின் ஓ ப்ரயன் அந்த பெருமையைத் தேடிக் கொண்டுள்ளார். 6 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள்…  ஐம்பதே பந்துகளில் சதமடித்து உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த சாதனையும் வேறு. இங்கிலாந்தின் ஒருவர் பந்தையும் விட்டு வைக்கவில்லை. அவருடன் Cusack நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தார். 129292

ஆனால் இந்த போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற அவர்களின் திறமை மட்டுமல்ல, இங்கிலாந்தின் மோசமான ஃபீல்டிங்கும் பவுலிங்கும்தான் காரணம். அநாயசமாகப் பிடிக்கவேண்டிய கேட்சுகளை தவறவிட்டார்கள். மிஸ் ஃபீல்டிங், கவனக்குறைவு, மோசமான பந்துவீச்சு போன்றவை இங்கிலாந்து வேணுமென்றே செய்வதைப் போல இருந்தது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ப்ரயர், ஒருசில எட்ஜ் களையும், அழகான கேட்சுகளையும் தனது மோசமான திறமையால் விட்டுக் கொடுத்து அயர்லாந்தை வாழவைத்துக் கொண்டிருந்தது, ஹைலைட்ஸ் பார்க்கும் பொழுதே எரிச்சலாக இருந்தது… பாவம் ஆங்கிலேய மக்கள்!!  இந்தியாவிடம் ஆடியபோதிருந்த effort இங்கிலாந்திடம் நேற்று சுத்தமாக இல்லை, (கடைசியாக அயர்லாந்து அடித்த பவுண்டரியை தடுக்க இங்கிலாந்து வீரர் ஓடி வருவார் பாருங்கள்.. எவ்வளவு மந்தமாக!!)

சரி, இதற்கும் மேல் எழுத ஒன்றுமில்லை. ஆங்கிலேயனை இந்தியன் அடிக்க ஆசைப்பட்டு கடைசியில் ஐரிஸ், காறி உமிழ்ந்துவிட்டது…

இந்த உலகக் கோப்பையில் ஒருசில அதிர்ச்சிகள் நாடகத்தனமாகவே தெரிகின்றன. இதனை பத்திரிக்கைகளும் நேற்று உறுதிபடுத்திருக்கின்றன. மேட்ச் ஃபிக்ஸிங் நடந்திருக்குமோ என ஐசிசிக்கு சந்தேகமும் எழுந்திருக்கிறது என்றாலும் ஐசிசி பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றுதான் தோணுகிறது. என்னதான் பெங்களூரு பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகம் என்றாலும் இப்படியா என்று பலரும் உச்”சாதாபப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இனிவரும் போட்டிகளை கணிப்பதாக இல்லை!!! தவிர நாக் அவுட் மேட்ச் வேறு இருக்கிறது…. பார்ப்போம்!!


புள்ளிப் பட்டியல் :

Group A

Teams    Mat Won Lost    Tied    Pts
Sri Lanka 3 2 1 0 4
Pakistan 2 2 0 0 4
Australia     2 2 0 0 4
New Zealand 2 1 1 0 2
Zimbabwe     2 1 1 0 2
Canada     2 0 2 0 0
Kenya 3 0 3 0 0

Group B

Teams    Mat Won Lost    Tied    Pts
India         2 1 0 1 3
England     3 1 1 1 3
West Indies    2 1 1 0 2
South Africa 1 1 0 0 2
Ireland 2 1 1 0 2
Bangladesh    2 1 1 0 2
Netherlands 2 0 2 0 0


Subscribe