விடலைக் காதல்

இது கேள்வி பதில் நடையில்.... இறைவனிடம் நான் வேண்டுவதாக,,

மேனியெல்லாம் தூண்டுமய்யா-காதற்
கொள்ள கொங்கை மாந்தர் கண்டாள்
நாணி நானும் உம்மிடம் சொன்னேன்
நல்ல பதில் தாரு மய்யா!

காணி நிலமில்லாமல், பையிலே காசில்லாமல்
கையிலே வேலையு மில்லாமல் உனக்கு
வேணுமோடா இந்த காதல்! எனைநினைத்து
விட்டு ஒழிடா பட்டென அதை.

விடலைப் பருவ மெய்தினேன் ஆதலால்
இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு
விடலையே என் காதல்; வழியொன்று
சொல்லு மய்யா அதை விட்டொழிக்க.

கடவுளென எனைவிட நாளும் நின்றன்
தாய் தந்தையைப் போற்றடா
நடவும் இந்த காதல் கருமங்கள்
இனி வருமோ நாளும்?

உதறலெடுக்கு தய்யா இவர்
முகம் காணின், எந்நாளும்
பதற்ற மாகுதய்யா இராவு தோறும்
என்ன விடை இதற்கு?

கதறும் நின்மொழி கண்டே
பக்தா உமக்கருள்வேன்
இதழிலே விழும் வார்த்தைகளை
கவியாக் கினி காதல் விட்டு..

Comments