இன்னொரு நிலவிடம் இனிய வேண்டுகோள்

சில நேரங்களில்
இயற்கையும் தவறிழைக்கும்
பாவம்
இங்குள்ளவர்களின் நிலை
அதற்கெப்படித் தெரியும்?

மூன்றாம் பிறையை மறைத்த
இன்னொரு நிலவே!
அணைந்த நெருப்புக்கு
அணைந்த வாயு ஊட்டுகிறாய்

ஆழங்களற்ற மலைகளும்
உயரங்களற்ற கடல்களும்
இதோ
இங்கூறும் எறும்புக்கு
ஆகாரமாக சபி!
அல்லது
அதுவே எங்கள்
மரணத்திற்கு காரணமாக
சாபத்தை விதி!!

முலைப் பாலாய்
மழை அனுப்பி
இழைக்கிறாய் தீமை!
எங்களின் உறிஞ்சல்கள்
இங்கே பத்தாது!!
அதற்கென தருகுவாய்
வத்தாது!

பிணிகளும் அச்சமும்
இந்நிலையில்
மேன்மைக்கு ஒப்பாகும்
உன் விழிகளின்
கதிர் படாது போனால்
பூமியே இங்கு தப்பாகும்!

இயற்கையின் இன்னொரு
நிலவிடம் கேட்பது
கவலைப் பனிகளை உருக்கிவிடாதே
இல்லையென்றாலும் உருக்கிவிடாதே!!

Comments