ஊர்த்தி வைத்த கோப்பையிலே
ஒரு கோடி இன்பங்கள்
சேர்த்தி வைத்த அழகெல்லாம்
முந்தானை விஷங்கள்
பார்த்த போது அறிந்தேன்
அழகுப் பதுமைகள்
வேர்த்த போதுதான் தெரிந்தது
பெண்களின் விஷமங்கள்

கோப்பையிலே நடனமாடும்
அழகு சிலைகள்
வேப்பிலை சாறாய் கசந்தாலும்
வெட்கும் யுவதிகள்; உயிர்
காப்பதிலே எவ்வளவு சிரத்தைகள்
பார்ப்பதிலே தெரிந்ததா? பாது
காப்பில்லா படுக்கையறைகள்.

மூர்க்கத் தனத்திலே மிஞ்ச
மஞ்சத்துப் பெண்கள்
பார்வதியா? சிவனா? கள்ளன்
கொடுத்த கள்ளிலே ஒருமித்த கடவுள்கள்
சேர்ந்த் மனையாள் சொல்லும்
சொல்லிலே பல விஷங்கள்
சோர்ந்த உடலை குளிர்விக்க
இந்த பாட்டில் தேவதைகள்

காதலித்த பாவத்தினால் இந்த
இன்பமய கருமங்கள்
பூதவுடல் மண்ணில் சேர
இப்போதே ஆரம்பங்கள்
சாதமுங் கசந்ததினால் உடல்
ஒட்டா தூய்மைகள்
வேதனை அளிக்கும் கோப்பை
சுக துக்கங்கள்

என்று தீருமோ கோப்பை
அழகிகளின் நிர்வாண ஆட்டங்கள்
நின்று போகாதோ அந்த
விழிகளின் ஓட்டங்கள்
எண்ணும் போதே கனவினில்
இந்த யுவதிகளின் தாகம்
மண் மூடும்போதே விலகாதா
கோப்பைகளின் மோகம்?

வெந்துவிட்ட என்னிதயத்தின்
சாம்பலை, என்றும்
நொந்து போகாத உனக்குத்
தருவதை விரும்பிவிட்டேன்
வந்து அதைத் தின்னு.
சொல்லு அப்பொழுதாவது
உன் இரக்கமற்ற காதலை!!

கழுகுகளின் வேட்டையில்
காய்ந்துபோன எனது உடல்
காயப்பட்டு போனது அறிந்து
என் உணர்ச்சியைப் புரிந்து
பாடுவாயா காதல் ஓதலை?

பனியின் பிடியில் சிக்கிய
மனிதனாய் தவித்து
இனி உன் மடியே என
நினைத்தவனுக்கு நீ
இழைத்த கருமங்கள்
எண்ணிப் பாரடி! அப்பொழுதாவது
புரிவாய் என் மூடத்தனமான சாதலை!!

வாயிலே பேசாமல்
கண்களிலே பேச முயன்றேன்
இன்று அதுவும் பயனில்லாது
போயினவே என
ஆவியாய் நின்று அழுது போகிறேன்
கண்டு கண்ணீர் விடுவாயா எனது
ஆவி அழுது போதலை??

15.12.06

மதி

|

மஞ்சள் மதியழகே மதிமயங்கும்
செண்பகமே யென
பஞ்சப் பாட்டிசைத்து
வழியெல்லாம் பூவிரைத்து
நெஞ்சம் உருகி நினைவெல்லாம்
நீயென்று
கொஞ்சு தமிழ் பேசி, குலவி,
நினைப்பேனடி!

உறங்கவோ உயிரில்லை
நினைவினிலே
மறக்கவோ முகமில்லை
என
கிறங்கவோ நீ வந்தாய்
அமுதே
திறந்துவிடு மனதை
எனக்காய்!

கொதித்தெழ தெம்பில்லை
நாவினிலே,
மிதித்தெழ வலுவில்லை
நினைவினிலே
விதித்த தண்டனை இனியுமோ?
என்றேன்
விதியே! விளக்கே! எனக்கு
விளங்காதவளே!

ரதியே! ரம்பே! நான்
வணங்கும் தேவகியே!!
வா வந்தணை என்னை!
வானம் முழுவதும் விடியும்வரை
காத்திருப்பேன்.

Subscribe